* அறியாமை என் யுத்தக் களம்….!

Vinkmag ad
* அறியாமை என் யுத்தக் களம்….!
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{
* கட்டமைத்த கவிதை, பாடலில் அனுபவம்,கருத்து,பிரச்னைக்கான தீர்வு மூடு பொருளாய், ஒப்புவமையோடு இருந்தால் அது கவிதை!
*எழுத்தாளர், பேச்சாளர்,
கவிஞர், கல்வியாளர், புலவர், பொது ஜனம் என ஏழு கோடிக்கும் மேலானோர் உதடுகள் அழுந்தி ஒலியாகவும், மையழுந்தி எழுத்தாகவும் வெளிப்படும் தமிழ்!
* உருவத்தை காட்டி ஓசையை உள்ளுக்குள் வைத்து தாளின் மேல், புத்தகத்தின் உள்ளாக உறங்கும் போது எழுத்தென்று உரைக்கிறோம்!
* ஒன்றுபட்ட சொற்கள் உறவுக் கரம் கோர்த்து வரிசையாக வரும் போது வார்த்தை என்கிறோம்!
* விழிகளின் சாளரக் கதவுகள் திறந்து ஊடுருவி இதயத்தினுள் புகுந்தால் அது கல்வியாகின்றது!
* தென்றலில் தவழ்ந்து செவிகளுக்குள் புகுந்து கருத்துள் படிந்தால் அதுவே கேள்வி ஞானம்!
> படித்துணர்வது கல்வி!
> கேட்டுணர்வது கேள்வி!
> உயிர்த்துடிப்பும், பொருளும்
பின்னிப் பிணைந்திருந்தால்
அது கவிதை!
* தீமையிலிருந்து வெளி வர,
நன்மை எதிர்ப்பட, பொது
உணர்ச்சியை உருவாக்க
வேண்டும் வடிக்கும் கவிதை!
> அறியாமைத் தனம் எனது
யுத்தக் களம்!
> ஆராயும் அறிவே என் கேடயம்!
> வாய்மை என் மார்புக் கவசம்!
> கவிதையே எனக்குக் கைவாள்!
√ இந்த நான்கும் அறிந்தோர்
ஏற்போரே கவிஞர், புலவர்!
– சோதுகுடியான் : 09/07/2021

News

Read Previous

48000 ரூபாய் தர அரசு ரெடி .…! நீங்க ரெடியா ? கடைசி தேதி செப் 26

Read Next

குயிலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *