அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள்

Vinkmag ad

அமரர் ராஜீவ் காந்தி நினைவு நாள் அஞ்சலி -21.05.2020

 
தமிழக வரலாற்றில் , 1991 , மே .21,  
தலை குனிவை ஏற்படுத்திய நாள் .
தாமரையின் பெயர் கொண்டவரை 
தரணி போற்றிய தலைவனை 
தனுசு என்னும் மனிதவெடிகுண்டு 
தலை வேறு , கால் வேறாய் 
தகர்த்தெறிந்த கருப்பு நாள் . 
 
தேர்தல் பிரச்சாரத்திற்கு தேஜஸுடன் வந்தவரை 
நேரு குடும்பத்து நேர்மையான வாரிசை , 
இந்திராவுக்குப்பின் வந்த இளைய பிரதமரை 
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட 
இந்திய அமைதிப்படையை அனுப்பியதால் 
இன்னலுக்காளான விடுதலைப்புலிகள் -அவரது 
இன்னுயிரைப் பறித்தனர் இந்திய மண்ணிலே. 
 
திருப்பெரும்புதூர் வந்த தேசியத் தலைவரை 
திரும்பிச் செல்லவிடாது , தீயவர் அழித்தனர் . 
உடலின் பாகங்கள்  , உருத்தெரியாமல் சிதற  
உலுத்தர்கள் ஆடினர் உக்கிரதாண்டவம் . 
அரசியல் எதிரியை ஒழிக்க ,மரணமடைந்தார் வழியிருந்தும் 
அன்னையைக் கொன்றதுபோல் ,அவரையும் கொன்றனர். 
இனியாரும் இந்நாட்டில் காந்தியின் பெயர் வைக்காதீர் .
இயற்க்கை மரணம் வாய்க்காது அவர்களுக்கு. 
காந்தி சுடப்பட்டார், இந்திரா காந்தி சுடப்பட்டார், 
சஞ்சய் காந்தி விபத்தில் அகால மரணமடைந்தார் 
ராஜீவ் காந்திக்கோ வெடிகுண்டால் துர்மரணம் . 
 
அவர் மட்டுமின்றி , அன்று அவரோடு பொதுமக்கள் 
பதினேழுபேர்கூட பரலோகம் சென்றுவிட்டார் . 
தேசத்தின்  பிரதமரைக் கொன்றுகுவித்தவர்க்கு 
தேசபக்தியில்லாத தீய சக்திகளெல்லாம் 
நேசம் காட்டுவதும், நீதி மன்றம் செல்வதுவும் ,
நாசவேலை செய்தவர்க்கு ஆதரவளிப்பதுவும்  
மோசமான செயல் என்று ,உணரும்நாள்  எந்நாளோ ! . 
பயங்கரவாதம் பாரில்  வேரோடு அழியட்டும்   . 
அஹிம்சையும், அமைதியும், அகிலமெங்கும் ஆளட்டும்  
 
 சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்   
 

News

Read Previous

கொரோனா கண்டிப்பு

Read Next

வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *