அன்றும் இன்றும்

Vinkmag ad

அன்று:

கன்னத்தில் முத்தமிட்டு
கட்டியணைத்து
உச்சிதனை முகர்ந்து
உச்சந்தலையில் ஓதி
சென்றுவா மகனே
”வென்றுவா மகனே”
என்றுதான் புகழந்த தாய்
அன்றுதான் கண்டோம்
இன்று:
“ஏழு மணியாச்சுடா
எழுந்து வா சனியனே”
கோபத்தில் வாயைக்
கொப்பளித்து
சாபத்தில் காலைச்
சாப்பாட்டை அளித்து
விரட்டியடிக்கும்
வீரத்தாய்(?) இன்று
அன்று:
தாய்பாடும் தாலாட்டும்
நோய்போகும் நல்மருந்தும்
வாய்பாடும் மனக்கணக்கும்
வாய்த்தது நமக்கு அன்று
இன்று:
தொடர்நாடகம் தருகின்ற
தொல்லைக் காட்சியும்
பக்கவிளைவுகளின்
பக்கமே இழுக்கும் மருந்தும்
கணிதப்பொறி,கைப்பேசி,
கணினிகளால் மனக்கணக்கும்
வாய்பாடும் வாயைவிட்டும்
போய்விட்ட கொடுமைகள்
அன்று:
”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று
தமிழாய் தமிழுக்காய்த்
தாழாது உழைத்தனர் எத்துணைப் பேர்!
இன்று:
கொலைவெறிடி” சத்தம்
கொலை செய்யும் தமிழை நித்தம்
நிலை மாறியதே மிச்சம்
நிலைத்திடுமோ இதுவென அச்சம்
அன்று:
“பர்கத்” என்ற சொல்லின் விளக்கம்
படிக்காமல் நடைமுறை விளக்கும்
சொர்க்கத்தின் காற்று வீசும்
“சுப்ஹூ” தொழுதவர் வீடும்
இன்று:
பணப்புழக்கம் அதிகமாய் இருந்தும்
மனப்புழுக்கம் நோயாளியாக்கி மருந்தும்
நரகத்தின் வேதனைகளை அனுபவிக்கும்
விரக்தியால் அல்லற்படும் வீடும்
அபுல் கலாம் (த/பெ: ஷைக் அப்துல் காதிர்

(”கவியன்பன்”, கலாம்)

News

Read Previous

மருந்து வாங்கும் போது… எச்சரிக்கை!

Read Next

சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ஆண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.