கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

Vinkmag ad

கேரளாவில் சாதிக்கும் இளம் ஐஏஎஸ் பட்டாளம்…

கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது..

அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியான சேவை செய்து வருகின்றனர்…

ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆதிலா அப்துல்லாஹ்,

கொல்லம் மாவட்ட ஆட்சியராக பி.அப்துல் நாசிர்,

மலப்புறம் மாவட்ட ஆட்சியராக ஜாஃபர் மாலிக் ஆகியோர் குறைந்த வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டர் பதவியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

கேரள அரசின் கனவுத் திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த முகமது ஹனீஸ் ஐஏஎஸ் தற்போது கேரள அரசு தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்..

மேலும்
கேரள கல்வித்துறை செயலாளராக ஏ.ஷாஜகான் ஐஏஎஸ்,

ஜி.எஸ். டி இயக்குனராக ஒய். ஷபீறுல்லாஹ் ஐஏஎஸ்,

சுசித்ர மிஷன் திட்ட இயக்குனராக மீர் முகமது ஐஏஎஸ் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

கேரள அரசின் பல்வேறு துறைகளில் கூடுதல் செயலாளர் பொறுப்பில் எஸ். ஷானவாஸ் ஐஏஎஸ், அஷ்ரப் அலி ஐஏஎஸ் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்…

. . . . . . . . .
இங்கும் இதுபோல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டங்களும் செயல்பாடுகளையும் கேட்டால்,

அங்கும் தத்தம் பரப்புரைகளை, நம்பிக்கையை அழுத்தமாக பதிவிடுகிறார்கள். அதை சுட்டிகாட்டும் போது, தாம் சேர்ந்த குழுவிற்கு எதிரானவராக முத்துரை குத்தி ஆக்க பூர்வ செயலுக்கு முன்வராது எதிர் வினை ஆற்றும் போது நாம் எங்கே நிற்கிறோம் என நமக்கே தெரிகிறது.

ஏழைக்கு ஒரு நாள் உணவு கொடுத்து அதை பேனர் போட்டு போட்டோ போடுவதை விட, அவர் சுயம் தொழில் செய்து அவர் குடும்ப வாழ்க்கையை அவரே முன்னேற்ற நாம் என்ன செய்யலாம் என தீவிரமா செயல்படவேண்டும்.

எந்த வாட்சப் குழுவில் எந்த செய்தி பொருத்தமானது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதில் கோபம், வருத்தம் அவசியம் இல்லை.

அனவரும் ஒன்றுபட்டு ஊருக்கு ஒரு IAS பட்டதாரியை உருவாக்கி சாதனை நிகழ்த்த வாரீர்.

அதற்குரிய வழி முறைகளையும், மாணவ, மாணவிகளையும் கண்டு பிடித்து செயல்படுவோம்.

முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்.

News

Read Previous

இரு தெருவுக்கிடையில்…!

Read Next

காற்றுவெளி

Leave a Reply

Your email address will not be published.