மூடப்படுகிறது ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்!

Vinkmag ad
அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான ‘மிந்த்ரா’ மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது. தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை அதிபர் மைக்கேல் அதானி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 3-வது மிகப்பெரிய ஷாப்பிங் சைட்டாக உள்ள பிளிப்கார்ட்டுக்கு 4 கோடிக்கு அதிகமான பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மொபைல் ஆப்ஸ் வழியாக இதுவரை 20 கோடிக்கும் அதிகமான பொருட்களை 30 ஆயிரம் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்திருக்கிறது பிளிப்கார்ட். இந்தியாவில் மட்டும் 24 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் ஷாப்பிங் காரணமாக வெப்சைட்டில் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 10 மடங்கு ஆன்லைன் டிராபிக் அதிகரித்துள்ளது. இந்த சவாலை சமாளிக்க மொபைல் ஆப்ஸ் வழியாக பிரத்யேக பிளாட்பார்மில் இனி வர்த்தகத்தை வழங்க முடிவு எடுத்துள்ளது. மாதத்திற்கு 8 கோடி ஆர்டர்களை வினியோகித்து வரும் பிளிப்கார்ட்டுக்கு 3-ல் 2 பங்கு ஆன்லைன் டிராபிக் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து மட்டுமே வருகிறது. மிந்த்ராவின் மொபைல் ஆப்ஸ் வளர்ச்சி பிளிப்கார்டை விட அதிகமானது. கடந்த ஆண்டு மிந்த்ராவை ரூ.2 ஆயிரம் கோடிக்கு கையகப்படுத்திய பிளிப்கார்ட் வரும் மே 1-ந்தேதி முதல் மொபைல் ஆப்ஸ் மூலமாக மட்டுமே வர்த்தகத்தை வழங்குகிறது. அதே பாணியை இனி பிளிப்கார்ட்டிலும் கடைபிடிக்க தயாராகிறது.

News

Read Previous

தவறை ஒப்புக் கொள்வது தலை குணிவல்ல!

Read Next

வெல்பேர் பார்ட்டி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.