நூலெடுப்போம்

Vinkmag ad
நூலெடுப்போம்
சைகையில் தொடங்கி ஓவியமாய் ஒலிக்குறிப்பாய் வளர்ந்து எழுத்தாணித்தாயின் தழுவலில் ஓலையில் முகிழ்த்தன முந்தையர் எண்ணங்கள்
வளர வளர எந்திரங்கள் பெற்றெடுத்த காகிதக்குழந்தைகள் புத்தகங்கள்
கருப்பு வெள்ளையில் கருத்துச்சொன்ன நிதர்சன வரலாறுகள்
பரண்ஓலையெல்லாம் தூசுதட்டப்பட்டு அச்சுவெல்லமாய் நமக்கு கிடைத்த சமூகத்தின் சாளரங்கள்
எழுத்துகள் அணிவகுத்து கண்குளிர நாம் தரிசித்த இலக்கிய ஆலாபனைகள்
ஒளித்த வித்தையெல்லாம் வெளிச்சமானது
வித்தையெல்லாம் விருட்சமாக்கியது
கைநாட்டுக்காரர்களின் கரமேறி அவர்தம் நெஞ்சதனில் உரமாகி மைதொட்டு கையெழுத்தை பிரசவித்தது
கற்காலம் மலையேறி கற்கும் காலமானது இக்காலம்
ஏடுகளை புரட்ட புரட்ட களையழிந்து கலை முகிழ்த்தது
வாசிப்பு நேசிப்பானது
விடிய விடிய படித்த கதைகள் கவிதைகளென நிழலாடுகிறது ஏராளமாய் நெஞ்சில்
மனிதா
மானம் காக்க மட்டுமல்ல
மனம் காக்கவும்
நூல் முக்கியம்
உன்
சோம்பல் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு
இனியேனும் புத்தகம் தொடு
வெடிக்கட்டும் உன்னிலிருந்து ஒரு புதுயுகப் புரட்சி
இன்று உலக புத்தக தினம்
— சீனி.தனஞ்செழியன்

News

Read Previous

லெனினும் இந்தியப் புத்தகங்களும்

Read Next

விலை போகும் ஸ்டார்ட் அப் கனவு

Leave a Reply

Your email address will not be published.