விலை போகும் ஸ்டார்ட் அப் கனவு

Vinkmag ad

விலை போகும் ஸ்டார்ட் அப் கனவு

இந்தியாவில் 55 ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் இருந்தாலும் இன்னமும் இந்திய ஆன்லைன் சந்தை என்பது 10 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்லைன் சந்தை 33 பில்லியன் டாலர். இதில் பெரும்பான்மை சதவீதத்தை அமேசானும், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட்டும்தான் வைத்திருக்கின்றன. காரணம் ஆன்லைன் வர்த்தக சூழலில் தொடர்ச்சியாக புதிய புதிய ஸ்டார்ட் அப்கள் வந்தாலும் அவற்றால் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கரோனா பாதிப்பு காலத்தில் ஆன்லைனில் அதிக வர்த்தகம் நடந்திருக்கிறது. இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை அதிகரித்துவருகிறார்கள். பொழுதுபோக்கிலும் டிஜிட்டல் தளம்தான் பெரும்பான்மை என்ற நிலை வந்திருக்கிறது. டிஜிட்டல் பேமென்ட் முறைகளால் இவை அனைத்தும் மிகவும் எளிதாகியிருக்கிறது. எவ்வளவு புதிய வாய்ப்புகள், துறைகள் உருவானாலும் மீண்டும் மீண்டும் இந்தியத் தொழில்துறையின் ஆதிக்கம் பெரு நிறுவனங்களின் கைகளில்தான் போய்ச் சேருகின்றன. இது இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் அடுத்தடுத்து கால்பதிக்க விரும்புபவர்களுக்குத் தயக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

-தமிழ் இந்து வணிக வீதி இணைப்பில் ஜெ,சரவணன் எழுதியதிலிருந்து

News

Read Previous

நூலெடுப்போம்

Read Next

கண்ணாடிக்குப்பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *