தமிழக தொல் வடிவங்களும் குறியீடுகளும் – விசிறிக் கல்

Vinkmag ad
தமிழக நிலப்பரப்பில் தொண்மையான பல வடிவங்கள் ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும் காணக் கிடைக்கின்றன.  கருங்கல்லால் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டு வடிவமான விசிறிக் கல் என்பதும் அந்த வகையில் ஒரு தொல்வடிவமாக அமைந்திருக்கின்றது.
2009ம் ஆண்டில் திருவண்ணாமைக்குச் சென்றிருந்த போது நண்பர் ப்ரகாஷ் சுகுமாரன் என்னை கிராமப்புற பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருந்தார். தானிப்பாடி என்ற சிற்றூருக்கு அருகில் இருக்கும் மோட்டூர் கிராமம் அது. அங்கு இவ்வகை கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட ஒரு விசிறிக்கல் இருப்பதைக் கண்டேன். இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு தொல் வடிவம் அது. 3.5மீ உயரமும் 1.75மீ அகலமும் கொண்ட வடிவம் இது. கிராமத்து மக்களால் இன்றும் வழிபடப்படும் நிலையில் இருக்கும் ஒரு தொல்வடிவம் இது.
இதே போன்ற மேலும் இரண்டு விசிறிக்கற்களை சித்தன்னவாசல் பகுதியிலும் பார்த்திதிருக்கின்றேன். இவை வழிபாட்டில் இருப்பதாக தெரியவில்லை. வழிபாடு நடந்தமைக்கான சான்றுகள் இல்லாது தனியாக கற்கள் மட்டும் நிற்கும் வடிவில் இவை இரண்டும் உள்ளன.
இந்த விசிறிக்கல் என்பது இரண்டு பகுதிகளாக அமைந்திருப்பது. மேல் பகுதி கீழ் பகுதி என்ற வகையில் இரு பகுதிகளாக இந்த வடிவம் அமைந்திருக்கின்றது. கீழ்ப்பகுதியில் வளைந்த கை பகுதியிம் அமைந்தார் போன்ற தோற்றமும் உள்ளது.மேல் பகுதி தலைப்பகுதி என்றும், கீழ்ப்பகுதி உடல் பகுதி என்றும் குறிப்பிடலாம்.
முனைவர் இராசு பவுன்துரை அவர்கள் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உடைய நத்தம் என்னும் கிராமத்திலும் இவ்வகை விசிறிக்கல் ஒன்று இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.
இந்த விசிறிக்கல் பண்டைய  தமிழரின் தாய்வழிபாட்டு முறை சின்னங்களில் ஒன்று. இன்றும் மோட்டூர் கிராம மக்கள் இதனை தாய் தெய்வம் என்றும் அம்மன் வடிவம் என்றும் குறிப்பிடுவதை நான் நேரில் சென்றிருந்த போது கேட்டு அறிந்து கொண்டேன்.
பொதுவாக ஆய்வறிஞர்கள் கூறுவது போல முனைவர் இராசு.பவுன்துரையும் தமது பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்னும் நூலில் இந்த  தாய்தெய்வ வழிபாட்டு சின்னங்களில் தலைப்பகுதி சிறிதாகவும் உடல்பகுதியாகக்காட்டபப்டும் பகுதி பெரிதாகவும் இருக்கும்  என்றே குறிப்பிடுகின்றார்.  இக்கருத்து உலகின் தொண்மையான வழிபாடுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களுடன் ஒத்திருப்பதையே நன்கு அறியமுடிகின்றது.

மோட்டூரில் இருக்கும் விசிறிக்கல் – தாய்தெய்வம்

சித்தன்னவாசலின் எதிர்புறத்தில் – தலைப்பகுதி இல்லாத விசிறிக்கல்

News

Read Previous

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!

Read Next

ஆபிதா பீவி வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.