தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

Vinkmag ad

முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

//////////////////////////////////////////////////////////////////////

காயிதே மில்லத் மறைவுக்கு பின்னால், சில ஆண்டுகள் கழித்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதே மில்லத் நினைவுக் கூட்டத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஐ.ஜி அருள் அழைக்கப் பட்டார். அப்போது அருள், பதவி ஓய்வுப் பெற்றிருந்தார். இந்த காயிதே மில்லத் நினைவுக் கூடத்திற்கு அருள் வர ஒப்புக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் ஐ.ஜி. சொன்ன செய்திதான் சரித்திரச் சான்றாகப் பதிவு செய்ய வேண்டிய ஒன்று.

“நான் காவல் துறையின் உயர்ந்த பதவியில் தமிழகத்தில் பணி புரிந்தவன். இன்று பதவி ஓய்வில் இருப்பவன். நான் எப்பொழுதும் என் பொறுப்புக்கு விசுவாசமாக நடந்துக் கொள்ள கூடியவன்.

நான் இங்கே சொல்வது இதுவரை தமிழகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாதது. ஆனாலும் அது உண்மையானது. இப்படி நான் பொது மேடையில் இதைச் சொல்வதால் காவல் துறையின் ரகசியத்தை வெளியிட்டு விட்டேன் என்று எவரும் தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம்.

நான் இங்கே சொல்லும் செய்தி, மக்களுக்கு தெரிய வேண்டிய உன்னதமான தகவல்தான்.
முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர். அந்தத் தேவை காவல்துறைக்கு நிச்சயம் இருந்தது. ஒரு குழுவே முஹம்மது இஸ்மாயிலை கண்காணிக்கத் துவங்கியது. அவருடைய எந்த ஒரு சிறு அசைவு கூட எங்கள் கண்ணை விட்டு மறைந்து விடாத அளவு முழு நேரம் விழித்திருந்து கண்காணித்தோம்.

#ஒருசின்னஅப்பழுக்குக்கூடஅவர்செயலில்எங்கள்துறைகாணவில்லை.

#ஒரு_உதாரணம்.

முஹம்மது இஸ்மாயில் சாஹிப் சென்னையில் இருக்கும் காலத்தில், சென்னை மண்ணடியில் உள்ள தலைமையகத்திற்கு மாலை சென்று விடுவார். இரவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரும் மின்சார ரயில் வண்டியில் திரும்புவார்.

இவை அனைத்தும் எங்கள் விழிகளுக்குள் தான் நடைப் பெற்றன. இது அவருக்கு தெரியாது.
இரவு கடைசி வண்டியில் குரோம்பேட்டை வரும் அவர், ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, மேம்பாலத்தில் ஏறி, தெருப் பக்கம் இறங்கி சற்று தொலைவு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்கு நடந்து செல்வார்.

அநேகமாக குரோம்பேட்டை மேம்பாலத்தை காலையில் கூட அநேகம் பேர் பயன்படுத்துவதில்லை.

ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளம் வழி நடந்து, ரயில்வே கேட்டை கிராஸ் பண்ணி சென்றால் அதுதான் சுலபமான வழி.
சட்ட விதிப் படி, தண்டவாளம் வழி நடக்கக் கூடாது. இந்த சின்ன விதியைக் கூட அர்த்த ராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில் தனியே கடை பிடித்து, அந்த வயோதிகத்திலும் படியேறி சென்ற முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் நேர்மையைக் கண்டு, நாங்களே பிரமித்து இருக்கிறோம்.

அவர் கடைப் பிடித்தது, மனிதர்களுக்காக மட்டும் அல்ல. இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கடைப் பிடித்து இருக்கிறார்”

என்று அருள், அன்று மேடையில் சாட்சியம் கூறினார்.

ஆக்கம்:  ஹிலால் முஸ்தஃபா

News

Read Previous

பாரதி எனும் மகாகவி

Read Next

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம்

Leave a Reply

Your email address will not be published.