தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்

Vinkmag ad

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 24ம் தேதி தவத்திரு பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் சிறப்புறக் கொண்டாடப்பெற்றது.

நாள் முழுவதும் நடைபெற்ற இக்கருத்தரங்கத் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்து, அடிகளாரில் ஆய்வு நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவினைச் சிறப்புற நடத்தி தவத்திரு தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த தமிழறிஞர்களைப் பெரிதும் பாராட்டினார்.

பின்பு நிறுவனத்திலுள்ள நூலகம் மற்றும் புத்தகக் கிடங்கு ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர் நூல்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் குறித்து கேட்டறிந்தார். பின்பு உலகத் தமிழர் பண்பாட்டு மற்றும் வரவேற்பு மையத்தை பார்வையிட்டார். திருக்குறள் ஓவியக்காட்சிக்கூடத்தை பார்வையிட்ட அமைச்சர், ஒவ்வொரு ஓவியங்களின் மூலம் திருக்குறள் கூறு அறநெறிக் கருத்துகளை கேட்டறிந்ததுடன், புத்தக அலமாரிகளில் சேகரித்து வைக்கப்பட்ட பழைய திருக்குறள் பதிப்புகளையும் பார்வையிட்டார்.

இறுதியாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கென ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நிருவாகக் கட்டடப் பணிகளை பார்வையிட்டார்.

News

Read Previous

எம்.ஜி.ஆர்., நினைவு தினம்

Read Next

சங்ககால தமிழர் வாழ்வைப் படம்பிடித்து காட்டுகிறது பெரும்பாணற்றுப்படை நூல்

Leave a Reply

Your email address will not be published.