கொள்ளை நோய் தந்த இலக்கியம்

Vinkmag ad

கொள்ளை நோய் தந்த இலக்கியம்

 

பெரிய அனுபவமான கொள்ளை நோய்கள் இருக்கும்போதும், அவை நம்மைக் கடந்த பிறகும் சில பண்பாட்டு விளைவுகள் வருவது இயல்பு. நல்லது, கெட்டது பற்றிய நம் தெளிவு குலைவது உண்டு. மக்களின் அனுபவம் ஆழமாகி இலக்கியங்களும் உருவாகியுள்ளன.

கதைக்குள் வரும் கதைகளாக “டெக்கமரான்” என்று பெயரிட்டு ஒரு கதைத் தொகுப்பு எழுதினார் பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் ஜொவான்னி பொக்காச்சோ. ஒட்டுவாரையெல்லாம் ஒட்டிக்கொண்டு ஃப்ளாரண்டைன் நகர மக்களில் பாதிக்கும் மேல் வாரிக்கொண்டுபோன பிளேக் தொற்று அவர்களின் அன்றாட நெறிகளை என்ன செய்தது என்று அவர் விவரிக்கிறார்.

எதையும் நிச்சயமாக அறிந்துகொள்வது மனிதர்களுக்குச் சாத்தியமா என்று நாம் என்றைக்கும் கேட்க மாட்டோம். அறிவின் நிச்சயத்தன்மைக்கு நாம் இப்படிப் பழகிக்கொண்டதால், ஆல்பெர் காம்யு எழுதிய “கொள்ளைநோய்” என்ற பிரெஞ்சு நாவல் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவது நம்மை அதிரவைக்கும்.

நிச்சயமில்லாத சூழலில் நிற்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாவலின் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது : “இதை பிளேக் என்று எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது அந்த முடிவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.”

உலகத்தில் மனிதனின் நிலைமை பற்றியும், நாம் செய்யக்கூடியது பற்றியும் காம்யு இதையேதான் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய முடிவுக்கு நமக்கு வெளியே ஒரு வழிகாட்டி இல்லை. மறைகளை, நெறிகளை, இறைவனையெல்லாம் நம் முடிவுக்குப் பொறுப்பாக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டிருந்த இறைவன் இருந்த இடம் இப்போது வெற்றிடம். நம் செயல் வழியாக நாமே தீர்மானிப்பதுதான் உண்மையாக வாழ்வதாகும்.

கொரோனா காலத்தில் உலகம் முழுதும் மக்கள் மறுவாசிப்பு செய்யும் நாவல் காம்யுவின் “கொள்ளைநோய்”. கதைக்காக அல்ல, காம்யுவின் தத்துவ மரபுக்காக அந்த நாவலை மீண்டும் வாசிக்கிறார்கள். கொரோனாவால் ஆழப்பட்ட மக்களின் அனுபவத்துக்கு காம்யுவின் நாவல் இப்போதும் ஒரு உருவம் கொடுத்து உதவியிருக்கும்.

– மே 31 தமிழ் இந்துவில் எழுதிய திரு. தங்க.ஜெயராமன் எழுதிய கட்டுரையிலிருந்து)

News

Read Previous

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

Read Next

துணிச்சலை எனக்குள் வார்த்தவர்

Leave a Reply

Your email address will not be published.