கேரளா-முக்த் பாரதத்தை உருவாக்குவோம்!

Vinkmag ad
கேரளா-முக்த் பாரதத்தை உருவாக்குவோம்!

அமித் ஷா : நான் என்னன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா உங்களையெல்லாம் நான் ஏன் கூப்பிட்டேன்னு நீங்க சொல்லணும்! சரியா?
குருமூர்த்தி : இந்த கருத்துரிமை, கருத்துரிமைன்னு சில அறிவிஜீவிங்க உளறிக்கிட்டிருக்காங்களே.. அவங்களை குளோஸ் பண்றதைப் பத்தியா?
அமித் ஷா : அதைத்தான் கரெக்டா பண்ணிக்கிட்டிருக்கமே? அது இல்லே!
தமிழிசை : மோடிக்கெதிரா ஒண்ணு சேர்ந்து எதிரணி உருவாக்க சிலர் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்களே.. அதை இந்துத்துவா பிளஸ் கரன்சி பலத்தை வச்சு உடைக்கறதைப் பத்தியா?
அமித் ஷா : நோ, நோ! அதைப் பத்திப் பேச புதுசா என்ன இருக்கு? நாமதான் அதிலே கைதேர்ந்தவங்களாச்சே?
எச்.ராஜா : பினராய் விஜயனை ஒழிச்சுக் கட்டறதைப் பத்தியா?
அமித் ஷா : பகுத் டீக் ஹை, ராஜா! ராஜா எங்கயோ இருக்க வேண்டியவரு.. அவரை என்னோட அசிஸ்டண்டா கூப்பிட்டு வச்சுக்க வேண்டியதுதான்.. மோடிஜி கிட்ட பர்மிஷன் வாங்கணும்!
(தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் முணுமுணுக்கின்றனர். ராஜா பெருமிதத்துடன் சிரித்துக் கொள்கிறார்).
அமித் ஷா : கேரளாவுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாதுங்கறதுதான் நம்ம முடிவு. நாம ஆட்சியிலே இருக்கற மாநிலங்கள்லேருந்து ஒரு துரும்புகூட கேரளாவுக்குப் போகக் கூடாதுன்னு அவங்களுக்கு ஒரு ரகசியச் சுற்றறிக்கையை அங்கே வெள்ளம் வர ஆரமிச்சதுமே அனுப்பிட்டேன்!
எச்.ராஜா : அப்பறம் ஏன் ஜீ..  600 கோடி ரூபாயை அவங்களுக்கு அள்ளிக் குடுத்தீங்க?
அமித் ஷா : கொடுக்கக்கூடாதுன்னுதான் நெனச்சோம். ஆனா வெள்ளச் சேதம் பயங்கரமாப் போயி நாடு பூராவும் உதவிகள் குவிய ஆரம்பிச்சுட்டுது. நாம எதுவுமே குடுக்கலைன்னா பேர் ரிப்பேராகிப் போயிருக்கும். 600 கோடி ரூபாயைத் தண்டமா அழும்படியாப் போச்சு!
ஆர்.எஸ்.எஸ் : அர்ஜுன் சேனா ஒரு வீடியோ தயாரிச்சுக்கிட்டிருக்கு.. கேரளாவுக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நெனச்சாலே மனுசங்க ரத்தம் கக்கி சாகறா மாதிரி தத்ரூபமா இருக்கும்.
குருமூர்த்தி : பேக்கிரவுண்டிலே ஐயப்பன் படத்தை வச்சிருங்க.. ஐயப்பன் சாபத்திலேதான் இப்படி நடக்குதுன்னு புரிஞ்சுக்குவாங்க!
தமிழிசை : என்கிட்ட அர்ஜுன் சேனா பத்தி யாராவது கேட்டா, அதெல்லாம் அவங்களோட சொந்தக் கருத்துன்னு சொல்லித் தப்பிச்சுடறேன்!
ஆர்.எஸ்.எஸ். ; வீர் சேனாவிலேருந்து ஒரு வீடியோ ஏற்பாடு பண்றாங்க.. ஒரிசாவிலே எப்பவோ யாரோ செஞ்ச வெள்ள நிவாரணக் காட்சிகள்ல ஆர்.எஸ்.எஸ். பானரைச் சொருகி அருமையாத் தயார் பண்ணியிருக்காங்க! அதைச் சுற்றுக்கு விட வேண்டியதுதான்!
பொன்.ராதாகிருஷ்ணன் : வேற நாடுகள்லேருந்து உதவி எதுவும் வாங்கக் கூடாதுன்னு காங்கிரஸ் முடிவு பண்ணியிருக்கலாம். காங்கிரஸ் எடுத்த பல முடிவுகளை நாம மாத்தலியா? இதையும் மாத்திருக்கலாமேன்னு கேக்கறாங்க.. நாம என்ன பதில் சொல்றது?
அமித் ஷா : மோடி பிரதமரா வந்த மறு நிமிஷமே பாரதம் உலக வல்லரசா ஆயிட்டுது.. அப்பறம் எப்படி மற்ற நாட்டு உதவிகளை ஏற்க முடியும்? அப்படி ஏத்துகிட்டா நாம வல்லரசு இல்லேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுமே?
எச்.ராஜா : கம்யூனிஸ்டுகளை மேற்கு வங்கத்திலே மம்தா பானர்ஜி ஒழிச்சுட்டாங்க. திரிபுராவிலே நாம அந்த வேலையைச் செஞ்சோம்! கேரளாவிலேயும் காலி பண்ணிட்டோம்னா அப்புறம் இந்து ராஷ்ட்ராவுக்கு நாற்கரச் சாலை போட்ட மாதிரிதான்… ஜாம்ஜாம்னு மார்ச் பண்ணிப் போக வேண்டியதுதான்!
ஆர்.எஸ்.எஸ் : இப்ப எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கற மாதிரி, வெள்ள நிவாரணத்தையும் மத்திய அரசோட வேலைன்னு மாத்திடணும். எந்த மாநிலத்துக்கு செய்யணும், யாருக்குச் செய்யக்கூடாதுங்கறதெல்லாம் நம்ம கையிலே இருக்கணும்.. இப்ப பாருங்க, பினாராயி விஜயன் நல்ல பேர் வாங்கிடுவார் போலருக்கே?
குருமூர்த்தி : அதை நாம லேசா விட்டுறக் கூடாது! அணைக்கட்டுகள்லே தண்ணியை எப்ப திறக்கணும்னு தெரியாம திறந்து விட்டதுனாலேதான் இப்படி ஜனங்க பலியாகும்படியா ஆயிட்டுது.. இதுக்கு விஜயன்தான் பொறுப்புன்னு கடுமையா பிரச்சாரம் பண்ணணும்!
எச்.ராஜா : விஜயன் கெட்ட பேரை வாங்கிட்டு பதவியை விட்டு ஓடணும்.. நாம அதை வெடி வெடிச்சுக் கொண்டாடணும்!
ஆர்.எஸ்.எஸ் : கேரளாவுக்கு அனுப்பற உதவியெல்லாம் முஸ்லிம்கள் வழியா பாகிஸ்தானுக்குத்தான் போகும்.. அதனாலே யாரும் கேரளாவுக்கு எதுவும் கொடுக்காதீங்கன்னு பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர்னு எல்லா மீடியாக்கள்லேயும் அபாயச் சங்கு ஊத ஏற்பாடு பண்ணிடுங்க!
குருமூர்த்தி : கேரள வெள்ளம் அந்த மக்களுக்கு ஆண்டவன் வச்ச சோதனை! கம்யூனிஸ்டுகளைத் தேர்ந்தெடுத்தாங்கள்ல? அதுக்கு நல்லா அவதிப்படட்டும்.. அவங்களுக்கு அது வேண்டியதுதான்!
எச்.ராஜா : ஆடிட்டர் சொல்றது சரிதான்! தலித்துகளை கோவிலுக்குள்ளேயே விடக்கூடாதுங்கறது நம்ம கொள்கை. விஜயன் அவங்களை அர்ச்சகராகவே ஆக்கினாருல்ல? அதைப் பாத்துக்கிட்டு பகவான் சும்மா இருப்பாரா? குருமூர்த்தி : அது மட்டுமா? ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. அவர் பக்கத்திலே பெண்களைக் கொண்டுபோய் அவரை டிஸ்டர்ப் பண்ணலாமா? ஐயப்ப சாமியோட கோபத்தைத்தான் இப்ப கேரள மக்கள் சந்திச்சுக்கிட்டிருக்காங்க!
(மோடி இரு கரம் கூப்பியபடி உள்ள வருகிறார்)
அமித் ஷா : கூட்டம் அருமையா முடிஞ்சுது ஜீ! கேரளா அவ்வளவுதான்.. குளோஸ்!
மோடி : பஹூத் அச்சா ஷா! நீங்கள்லாம் இங்கே பேசினதை மெயின்டைன் பண்ணுங்க. நான் கேரளாவின் துயரம்  பாரதமாதாவின் துயரம்! அந்த மக்கள் கண்ணீரைத் துடைப்பதுதான் என்னோட வேலைன்னு கண்ணீர் மல்க மன் கீ பாத்லே பேசிடறேன்.
கற்பனை : ராஜகுரு

News

Read Previous

இந்திரா காந்தியின் எமர்ஜென்சி… பி.ஜே.பியின் ’அர்பன் நக்சல்’ வியூகம்… என்ன வித்தியாசம்?

Read Next

ஆசிரியர் தின வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *