குழந்தைகளின் பத்து உரிமைகள்

Vinkmag ad

குழந்தைகளின் பத்து உரிமைகள்
———————————————————
குழந்தைகள் என்ற வார்த்தையே ” யாதும் அறியாதவர் ” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததே..

பிறந்த நாள் முதல் 18 வயதுக்குட்டவர்கள் குழந்தைகள்.

1924 ம் ஆண்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் குழந்தைகள் உரிமை பற்றி ஜெனிவாவில் விவாதிக்கப்பட்டது.

1959 ல் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் உரிமையின் இன்றியாமை குறித்து உணர்த்தியது.

1989 நவம்பர் 20 உலக குழந்தைகள் உரிமை ஆணையம், குழந்தைகளுக்கான பத்து உரிமைகளை சட்டரீதியாக அங்கீகரித்து பிரகடனப் படுத்தியது.

அவை….

1. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பெயர் மற்றும் அந்நாட்டில் பிரஜையாக உரிமை.

2. இனம் மொழி மதம் பாகுபாடின்றி வாழ உரிமை.

3.உடல் ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பெற்று கொள்ள உரிமை.

4. போதுமான உணவு , தங்க உறைவிடம் பெற உரிமை.

5. மாற்று திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மற்றும் சிகிச்சை பெற உரிமை.

6. சமூகத்தில் உள்ள பெற்றோர் மற்றும் பிறர் மீது அன்பு செலுத்த உரிமை.

7.இலவச கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பெற உரிமை.

8. விபத்துக்குள்ளான நேரத்தில் முதல் நபராக சிகிச்சை பெற உரிமை.

9. அனைத்து வகையான குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்து கொள்ள உரிமை.

10.சமூகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் பெற்று வளர உரிமை….

மேற்கண்ட சட்ட பூர்வமாக வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை வழங்கி
நாளைய இந்தியாவை நலமாக்கி வளமாக்குவோம்.

பா.திருநாகலிங்க பாண்டியன்

M.Sc., (Pediatric Nursing)

Nursing Tutor

Madurai Medical College

Madurai.

News

Read Previous

நவீன மருத்துவத்திற்கும் அக்குபங்சருக்கும் உள்ள வேறுபாடு

Read Next

அக்குபங்சர் மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published.