ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
————————————–
மரியாதையை மறந்து விட்ட
நமதூர் இளைஞர்கள்………!
————————————————–
நேற்றிரவு 8-30 மணியளவில்
அஜ்ஹர் முனையில் நிகழவிருந்த ஓா்
விபத்து இறையருளால் தடுக்கப்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் ஒரே வண்டியில்
அதி வேகமாக வந்த நமதூர் இளைஞர்
கள் இருவர், மிக வேகமாக அஜ்ஹர் முனையில் திரும்ப முயற்சிக்க,எதிர்த்தார் போல் வந்த வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டு சிதறியிருக்க வேண்டியவர்கள் தப்பித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அங்கே நின்ற பெரியவர் ஏம்பா….
இவ்வளவு வேகமாக வருகிறீர்கள்….?
வளைவில் நிதானமாக வரக் கூடாதா?
என்று கேட்டதற்கு, வண்டியின் பின்
இருக்கையில் இருந்த பையன் கைகளை
உயர்த்தி என்னா..? குரல் கொடுக்கிறீர்
களே என்னா…? அதை நாங்க பார்த்துக்
கொள்வோம் நீங்க போங்க…பெரிசா…
சொல்ல வந்துட்டாரு…….என்று கைகளை
உயர்த்தி அந்த பெரியவரை அவமரியாதை யாகப் பேச முற்பட்டான்.

ஹெல்மேட் கிடையாது, முகக் கவசம்
கிடையாது. இப்படி சுற்றித் திரியும்
இளைஞர்களை வைத்துக் கொண்டு
கொரோனாவை எப்படி ஒழிப்பது…..?
பெரியவர்களை மதிக்கத் தெரியாத
இப்படியும் நமதூர் இளைஞர்களா…..?
சே….சே…என்ன வளர்ப்பு இது. நாம்
எங்கே போய் கொண்டு இருக்கிறோம்.

கண்ட கண்ட இடங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்துவதும், போக்கு வரத்துக்கு இடையூறு செய்வதும், அதி வேகமாக ஒரே வண்டியில் இருவர்
மூவராக பறப்பதும்,காலை வேளையில் பதனீர் அருந்தச் செல்வோா் பலர் முகக்
கவசம் அணியாமல் செல்வதையும்
பார்க்கும் போது, கொரோனாவை
பற்றிய எந்தவித விழிப்புணர்வும்
நம்மிடம் இல்லை என்பதோடு, நம்மால் கொரோனா தொற்றறைப் பற்றி கவலைப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது மட்டும் புரிகிறது.

(நேரில் கண்ட காட்சியின் பதிவு)

ஏ.ஆா்.தாஹா(ART)16-06-2020

News

Read Previous

ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

Read Next

உழைக்கும் கைகளே

Leave a Reply

Your email address will not be published.