உதவி கரம் நீட்டுவோம்

Vinkmag ad

‘உதவி கரம் நீட்டுவோம்’
…………………………………….

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு ஆகும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகி உள்ளது.

இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்து இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உதவி வேண்டிய நேரத்தில், சிலர் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை மட்டுமே பெரிதாக பார்க்கிறார்கள்..

இருந்தாலும் ஒரு சிலர் சகோதரத்துவத்தோடு உதவி செய்பவர்களால்தான் இன்னமும் மனித குலம் உயிரோடு வாழ்கிறது..

ஒரு ஞானியிடம் அவர் மாணவன் ஒருநாள் நான் எப்படி வாழ வேண்டும்.. என்பதை.. தெரிவித்தால்..நலமாக இருக்கும்..’ என்றான்.,

அவரும் தன் ஆயுட் காலம் முடிவதை அறிந்து தன் மாணவன் இனி தனியாக விவரங்களை தெரிந்துக் கொள்ளட்டும்..என்ற எண்ணத்தில்.,

தூரத்தில் நொண்டிக் கொண்டே வரும் நரியைக் காட்டி,. அதனுடன் செல்.. அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது.. என்று பார்…,அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..’ என்றார்

நரியை தொடர்ந்து வந்த மாணவன்.தூரத்தே ஒரு சிங்கம் இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.

அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.
அதை சிறிது தின்று விட்டு மீதத்தை நரியிடம் போட்டு விட்டு சென்றது சிங்கம்..

உடனே அவனுக்கு வாழ வேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..அடுத்தநாள் முதல்,அவன்
உண்ணாமல் யாரேனும் தனக்கு உணவு கொண்டு வந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..
நாட்கள் உருண்டன…

ஆனால்..யாரும் உணவை கொண்டு வந்து தரவில்லை. அவன் உடல் இளைத்து.உடல் வலிமையை இழந்தான்..

ஞானியை தேடி வந்தான். நடந்தவைகளை அப்படியே சொன்னான்.

அந்த நரிக்கு கொடுத்தாற்போல் யாரேனும் எனக்கு உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்.. ஆனால் யாரும் வரவில்லை என புலம்பினான்.
.
பதிலுக்கு..அந்த ஞானி, அட..மடையா..நீ என்னிடம் எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்…நானும் சொன்னேன்..ஆனால்..நீ..நரியைப் பார்த்து தவறாக புரிந்துக் கொண்டாய்..

உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..
சிங்கம் போல வாழ நினைத்து இருக்க வேண்டும்..
மற்றவர்களுக்கு உதவியாய், மற்றவர்களுக்கு, உணவளிக்கக் கூடியவனாய் இருக்க ,எண்ணி இருக்க வேண்டும்’ என்றார்..

அப்போதுதான். அவனுக்கு. எப்படி வாழ வேண்டும்
என்பதற்கான விடை தெரிந்தது.

ஆம்.,நண்பர்களே.,

நம்மை நாடி உதவி கேட்டு வருகிறவர் களுக்கு இயன்ற அளவு உதவி செய்து வாழ்வது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை.
அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்!

அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும்.
இல்லாதவர்களுக்கு உதவி கரம் நீட்டுவோம்,
அவர்களின் கண்ணீர் துடைப்போம்..💐🙏🏻❤

News

Read Previous

சிந்துபூந்துறை

Read Next

பி. ஆர். பந்துலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *