இலக்கியத்தில் நோன்பு…..

Vinkmag ad
ரமலான் மாதம் இஸ்லாமியர்க்கு நோன்பு மாதமாகும். முப்பது நாள் நோன்பிருந்து.., இறைவனை வணங்கி நோன்பு நோர்ப்பர்.

ஏழை, பணக்காரன் என்ற பேதமையை கழிந்து ஒற்றுமையாய் நோன்பினை நோப்பர், நமது இலக்கியத்திலும் நோன்பினைப்
பற்றியும் விரிவாக பல செய்திகள் காணப்படுகிறது. அவற்றில் சில…..,
******************************
***********************************************************************************
இலக்கியத்தில் நோன்பு….. #1
இப்போது நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை அன்றாட வாழ்க்கையில் நாம் கேட்டுவருகிறோம்.
சிலர் பலகாரங்களை மட்டுமே சாப்பிடுவது என்று விரதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் சிலர் அசைவ உணவு சாப்பிடாமல், சைவ உணவு மட்டுமே சாப்பிடுவது விரதம் என்று நினைக்கிறார்கள்.

விரதம் என்பதற்குத் தமிழில் ” நோன்பிருத்தல் ” என்று பொருள். மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது

புலன்களை அடக்குதல் எனப்படும. அதாவது, செயல்படுத்த வேண்டிய காரியத்தை ஒழுங்குபட்டு உறுதியாக
மனதில் தீர்மானித்துக் கொள்வதே உண்மையான விரதமாகும். உயர்ந்த லட்சியங்களைச் செயல்படுத்துவதற்குத்
தேவையான மன உறுதி கொள்வது அதற்கான இறையருளை வேண்டுவதுவே விரத்தின் உயரிய நோக்கமாகும்.

தமிழர் தம் வாழ்வியல் தலை சிறந்தது ஒழுக்கம். உலகம் என்பது உயர்ந்தோரை மட்டும் குறிக்கும். உயர்ந்தோர்
என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பது தமிழர் பண்பு.

” விரதத்திற்கு ” க்கு அடிப்படை அடையாளம் ஒழுக்கம் – நேர்மை. பிழையானதை ,சீரில்லாமை இருந்ததை

நேர்மைப்படுத்தி , ஒழுக்குப்படுத்தி, நல் வழியாக்க தோன்றியது விரதம் எனலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும்
 முறைப்படுத்துவதற்கும் தோன்றிய சமய நெறிகளில் ஒன்று விரதம்.

விரதம் என்பது ‘ மனவலிமை கொள்ளுதல் ‘ எனப் பொருள் கொள்ளலாம். ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்று கூட

 கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு , தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி. இதனைக்
குறிக்கோளாகக் கொண்டு உள்ளடக்கியது. எல்லா விரதங்களுமே குறிகோளைக்கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது
என்று இது உறுதிப்படுத்துகிறது. இந்நாளில் நோன்பு ‘ விரதம் ‘ என்று மாறி நம் வாழ்வில் இ இடம் பெற்று வருகிறது.

அதுவே இக்கால சூழ்நிலையில் சடங்குகளில் தோன்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது எனலாம்.
159 விரதங்களை விபரமாக பட்டியலிட்டுக் காட்டுகிறது அபிதான சிந்தாமணியில்
உண்ணாது இருத்தல்.
உறங்காது இருத்தல்
வாய் பேசாதிருத்தல்
நீராடமையாக இருந்தல்

சங்க காலத்தில் தோன்றிய , சங்கப் பாடல்களில் பலவகை நோன்புகளூம் சொல்லப் படுகின்றன. தன்னை ஒறுத்துக்

கொள்ளும் நெறி தவசியர்களுக்குரியதாகக் கூறப்படுகிறது. நோன்புகள் மற்றோரிடத்தும் , மற்ற சமயங்களிலும்

காணப்படுகிறது. திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவத்திற்க்கு வந்தபின் பழையாறையில் உண்ணா நோன்பு
இருந்தாக வரலாறு கூறுகிறது. பழையாறையில் இறைவன் திருவடிவைக் காண இயலாவாறு மறைத்திருந்தனர்.

“வண்ணம் கண்டு நானும்மை வணங்கி யன்றிப் போகேன் என்று
எண்ணம் முடிக்கும் வாகீர் இருந்தார் அமுது செய்யாதே..”

                    ..” = என அப்பரடிகளின் உண்ணா நோபினை சேக்கிழார் பாடுகிறார்.

பதித்திரு , தனித்திரு, விழித்திரு எனும் தாரக மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானாகிய ராமலிங்க அடிகள் முதன் முதலில்

மக்களுக்குப் போதித்தார். ஆன்மீக நாட்டம் கொண்டோர் அதாவது இறைவனது திருவடிகளைப் பற்றிக் கொள்ள

வேண்டும் என நினைப்போர் பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும் விழித்திருக்க வேண்டும் எனப்
பொருள் கூறப்பெறுகிறது.


— நோன்பு நாளையும் நோர்க்கப்படும் –


அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

News

Read Previous

கல்விக்கண் திறந்த காமராசரின் மறுபக்கம்!

Read Next

ஏற்பது இகழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published.