இசைஞானியும் தென்றல் காற்றும்

Vinkmag ad

இசைஞானியும்
தென்றல் காற்றும்
—————————-
இசை, தென்றல் இரண்டும் இதமானவையே.

அதனால் என்னவோ தெரியவில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் தென்றல் காற்று என பல்லவியில் ஆரம்பவரிகள் அமைந்துவிட்டால் அதற்கு இசை கோர்ப்பில் அசத்திவிடுவார். இதற்கு ஒரு காரண கதையும் உண்டு

இசைஞானி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில். அப்போது சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களை சந்தித்து அவரது பாடலுக்கு இசையமைப்பு செய்யும் வாய்ப்பை கேட்கிறார்.

இசைஞானியின் திறமையை அறிய சட்டமன்ற விடுதி அறையிலேயே இசையமைக்க வைத்திருந்த வரிகளை கொடுக்கிறார்.

இசைஞானி வரிகளை பார்த்து சட்டமன்ற விடுதியில் மெட்டமைத்து இசையமைத்த பாடல் “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு,
எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு, சலாம் சொல்லு ” .

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை நோக்கி பாடும் பாடலின் இசையிலேயே பக்தி,ஏக்கம்,சோகம், ஆற்றாமை அனைத்தும் வந்து விழுந்ததில் ஆச்சரியப்பட்டு போன இசைமுரசு அவர்கள் இசைஞானிக்கு 1974 ல் இசையமைக்கும் வாய்ப்பை வழங்குகிறார்.

பாடல் முழுமையும் இசை முரசு அவர்களின் கம்பீர காந்த குரலில் சிறு சோகத்தை சுமந்து செல்லும் இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

1976 ல் அன்னக்கிளி மூலம் இசை அவதாரமெடுத்த இசைஞானி அன்றுமுதல் தென்றல் காற்று என பல்லவி தொடங்கும் பாடல் வந்தால் இசை கோர்ப்பில் அசத்தி விடுகிறார்.

தென்றல் வந்து தீண்டும்போது- அவதாரம்

தென்னம்கீற்றும் தென்றல் காற்றும் – முடிவில்லா ஆரம்பம்

தென்றல் காற்றே தென்றல் காற்றே – கும்பக்கரை தங்கையா

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு- ஈரமான ரோஜாவே

இன்னும் ஏராளம்….

தென்றல் காற்றும் இசைஞானி அவர்களின் இசையும் வேறல்ல இரண்டும் இதமானவையே.

பா.திருநாகலிங்க பாண்டியன்
மதுரை

News

Read Previous

எலந்தப் பழச்சிறுவர்கள்

Read Next

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *