அவமானம் ஒரு மூலதனம்

Vinkmag ad

அவமானம் ஒரு மூலதனம்

மன்னரின் அரசவைக்கு…

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதிக் கேட்டு வருகிறார்.

” நிதி தானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் அவர் நிலைக் குலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம் அவர் மனதைக் கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப் படுகிறோம் என தேற்றிக் கொண்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி விட்டுச் செல்கிறானே….என. ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும்.. எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்,

மேலும் தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை இவன் ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிறான்! என்றார்…

எவ்வளவு போகிறது…

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு…

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதிக் கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதி கட்டிடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது வீசுவீர்கள் என்றார் பாருங்கள்,

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும், சகிப்புத் தன்மையையும் எண்ணி…தாமே கல்லூரியைக் கட்டித் தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனாரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ, அவர்கள் ஒருநாளும் எதையும் ஜெயிக்க முடியாது. எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்கியம். மான அவமானங்கள் அல்ல…

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள் என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது…

அந்தக் காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது… “அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்”

எனவே அவமானம் என்பதும் ஒரு வித மூலதனம் தான்…

அதனையும் ஏற்போம், காலம் அறிந்து நம்மை அவமானம் செய்தவரே நம்மை உயர்த்திப் பேசுமளவிற்கு உயர்த்திக் கொள்வோம், வெற்றி காண்போம்…

கதையின் நீதி :-

நம்மை யார் என்று நமக்கே தெரிய வைக்கும் மிகப் பெரிய ஆயுதம் தான் அவமானம்…
அவமானத்திற்கு இரண்டு வகையான குணங்கள் உண்டு…
கோழைகளைத் தற்கொலை செய்ய வைக்கும்…
வீரனை வாழ்ந்துக் காட்டும் வைக்கும்…
நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள் மட்டும் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்ற வெறியை நம்முடைய மனதில் விதைக்கும்…
அவமானங்களும் அவ்வப்போது நமக்குத் தேவை தான்….

இல்லையென்றால் மானம் என்ற ஓன்றை மனிதன் மறந்தாலும்
மறந்துவிடுவான் இது தான் உண்மை

News

Read Previous

மறை நீர்

Read Next

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *