2014 மார்ச் பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

Vinkmag ad

பிளஸ் டூ தேர்வில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 97.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என தலைமை ஆசிரியர் முஹம்மது சுலைமான் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும்.

 

ஆண்களில் 103 பேர் தேர்வு எழுதியதில் 99 பேரும் ( 96.1 சதவீதம் )

பெண்களில் 136 பேர் தேர்வு எழுதியதில் 134 பேரும் ( 98.5 சதவீதம் )

தேர்ச்சி பெற்றுள்ளனர்.

239 பேர் தேர்வு எழுதியதில் 233 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

செல்வி எம். கவிதா 1152 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்

( தமிழ் 185, ஆங்கிலம் 180, இயற்பியல் 199, வேதியியல் 197, உயிரியல் 198, கணிதம், 193 )

செல்வன் எஸ். தினேஷ் 1138 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும்

( தமிழ் 188, ஆங்கிலம் 185, இயற்பியல் 195, வேதியியல் 187, உயிரியல் 187, கணிதம், 196 )

செல்வி இசட். அனிஸ் 1121 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

( தமிழ் 184, ஆங்கிலம் 178, இயற்பியல் 195, வேதியியல் 196, உயிரியல் 190, கணிதம், 178 )

 

சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும், இதற்குக் காரணமாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், கல்விக் குழுவினருக்கும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

News

Read Previous

காய் காய் புடலங்காய் ​

Read Next

ஹைக்கூ கவிதைகளை அனுப்ப ….

Leave a Reply

Your email address will not be published.