காய் காய் புடலங்காய் ​

Vinkmag ad


காய் காய் புடலங்காய்

சாம்பல் பூத்த பச்சைப்

பாம் பெனவே

நீண்ட காய்

குட்டைப் புடலோ நெட்டைப் புடலோ

உடலதன் ரோமம் உருவில் சிறிது

கண்ணாடி கொண்டே

படைத் திட்டாரோ அதனை

தொட்டால் உடையும்

தொட்டார் கை மணக்கும்

வயிறு குமட்டி

வாந்தியெடுத்த நாற்றமது

நாற்றம் பாராட்டாதே சமைத்திட்டால்

கூட்டோ கறியோ ருசியாய் இருக்கும்

பிஞ்சுப் புடலைத் தயிருடன் சேர்த்துப் பச்சடி செய்தே

உண்டிட நாவில் ஊறும் ஜலமே

நம் முன்னோர் சொன்னார்

நன் புடலுக் குண்டாம்

மருத்துவ குணங்கள் பலவும்

காய்ச்சல் தணிக்கும்

சூட்டைக் குறைக்கும்

காமாலை நீக்கும்

வீரியம் கொடுக்கும்

தோன்றிட வைக்கும்

போன மயிர் திரும்பத் தலையில்

டானிக் அதுவாம் இதய நோய்க்கும்

புடலின் பச்சை யிலைச் சாறு

இதயத்துக்கு இதம் தரும்

இதயப் படபடப்பினை போக்கிடு மாமது

நற் குணம் பலவும் கொண்ட

புடலை உண்போம்

நலமாய் வாழ்வோம்

23-04-2011                                      நடராஜன் கல்பட்டு

News

Read Previous

உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

Read Next

2014 மார்ச் பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *