ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டி மெட்ஸ் பள்ளி ஆண்டு விழா

Vinkmag ad

முதுகுளத்தூரில் மெட்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா எஸ்.கமால்நாசர் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மெட்ஸ் நிறுவனத்தலைவர் எம்.எஸ்.நைனா முகம்மது தலைமை வகித்தார். உதவித்தலைவர் ஏ.அப்துல்குத்தூஸ், செயலாளர் எஸ்.காதர்மைதீன், துணைச் செயலாளர் ஏ.நசீம் அகமது, பொருளாளர் எஸ்.வரிசைமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளித்தாளாளர் எஸ்.முகம்மது இக்பால் வரவேற்றார். முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டி.முரளிஜி,பேரூராட்சி தலைவர் சசிவர்ணம்,முன்னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கே.பொதுவன், மெட்ஸ் ஆசிரியை பயிற்சி கல்லூரி துணை முதல்வர் வி.சக்கரபாணி,ஆகியோர் கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினர்.

விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பிர்தௌஸ்கனி நன்றி கூறினார்.

News

Read Previous

தேசிய பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அறிமுக கூட்டம்

Read Next

கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி

Leave a Reply

Your email address will not be published.