பல்லியை அடித்தால் பத்து நன்மைகள்…..

Vinkmag ad

ஐயம்: பல்லியை அடித்தால் பத்து நன்மைகள் எனக் கூறுகின்றனர்.இது சரியா?

தெளிவு: ரசூல்(ஸல்) அவர்கள் பல்லியை கொல்ல ஆணையிட்டதாக உம்மு ஷரீக்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பனு ஆமிர் பின் லுவை என்ற குலத்தைச் சார்ந்த உம்மு ­ரீக்(ரழி) அவர்கள் பல்லியைப்பற்றி ரசூல்(ஸல்) அவர்களிடம் விசாரித்த போது இவ்விதம் பதிலளித்ததாக கூறுகிறார்கள்.

ஆயிஷா(ரழி) அவர்கள் பல்லி ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ஜந்து என ரசூல்(ஸல்) கூறியதாக தெரிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: பல்லியை ஒரே அடியில் சாகடித்தால் அதிக நன்மையும் இரண்டு அடியில் சாகடித்தால் ஒரே அடியில் அடித்தவரை விட குறைந்த நன்மையும், மூன்றாவது அடியில் சாகடித்தால் இரு அடிகளில் சாகடித்தவரை விட குறைந்த நன்மையும் கிடைக்குமென ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரே அடியில் சாகடித்தவருக்கு 70அல்லது 100 நன்மைகள் கிடைக்குமென அபூஹுரைரா(ரழி) கூறியதாகவும் ஹதீஸ்கள் உள்ளன. இவையனைத்தையும் ஸஹீஹ் முஸ்லிமில் கிதாபுல் ஸலாத்தில் -பல்லிகளை கொல்லல் என்ற பாடத்தில் (ஹதீஸ் எண் 5560 முதல் 5566வரை) பார்க்கவும்.


Thanks & Kind regards,

Kadhar Sulthan,
Manjakkollai.

 

News

Read Previous

ஒரு ரோஜாப்பூ போதும்!

Read Next

செலவில்லாத மருந்து சிரிப்பு !

Leave a Reply

Your email address will not be published.