தமிழகத்தில் இஸ்லாம்

Vinkmag ad

தமிழ்முஸ்லிம் கீழடி அகழாய்வு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாம்

ஜூன் 2020ல் கீழடி அகழாய்வின் தொடர்ச்சியில் இலந்தக்கரையில் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்களை ஊடகங்கள் தரமறுக்கின்றன. இந்த அரசியல் புதிதல்ல என்றாலும் உண்மை மெனக்கெட்டு மறைக்கப்படும் போதெல்லாம் அநாதைப் பிணமாய்ச் செத்துவிழும் இந்திய இறையான்மையைப் பற்றி கவலைகொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

இந்த சிரியா நாணயத்தில் “லாயிலாஹ இல்லல்லாஹு”  என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ”தொழுகைக்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை” என்பதாகும்.

இந்த நாணயம் ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். ஆனால் இது ஏழாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. அதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன.

முகம்மது நபி பெருமானார் ஆறாம் நூற்றாண்டான கி.பி. 570ல் பிறந்தார். ஏழாம் நூற்றாண்டான கி.பி. 632ல் இறைமடி சேர்ந்தார்.

கி.பி. 622ல் இஸ்லாத்தின் நாட்காட்டியான ஹிஜ்ரா தொடங்கியது.

கி.பி. 632க்குப் பிறகு இஸ்லாம் உலகெலாம் விரைந்து பரவத்தொடங்கியது.

அந்தக் காலகட்டங்களில் தமிழர்களுக்கும் அராபியர்களுக்கும் வணிகத் தொடர்பு இருந்தது. அதற்கு முந்தைய காலத்திலும் வணிகத் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பும் உள்ளது.

கேரளாவிற்கு அருகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேங்காப்பட்டிணத்தில் இந்தியாவின் முதல் பள்ளிவாசல் ஏழாம் நூற்றாண்டில் ஏறத்தாழ 620 – 650 காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளது.

சேரமான் பெருமாள் காலத்தில் இந்தப் பள்ளிவாசலை ஏமன் நாட்டைச் சேர்ந்த மாலிக் இப்ன் தினார் என்பவர் கட்டி இருக்கிறார்.

இவை சொல்லும் முக்கிய செய்தி என்னவென்றால் இஸ்லாம் தமிழர்களிடம் 7ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பரவத் தொடங்கிவிட்டது.

முகலாயர்களின் ஆட்சியில் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது என்பது பிழையான செய்தி.

கீழடி அகழாய்வு இலந்தக்கரையில் 7ம் நூற்றாண்டின் சிரியா நாணயம்

https://www.vikatan.com/news/tamilnadu/16th-century-gold-coin-found-in-keezhadi-excavation

தமிழகத்தின் முதல் பள்ளிவாசல் – கேரளாவிற்கு அருகில் உள்ள தேங்காப்பட்டிணம்

https://www.youtube.com/watch?v=eaUldrTusx4

#தமிழ்முஸ்லிம்

News

Read Previous

உலக தந்தையர் தினம்

Read Next

தந்தையர் தினம்

Leave a Reply

Your email address will not be published.