உலக தந்தையர் தினம்

Vinkmag ad
உலக தந்தையர் தினம்
   உன்னிலிருந்து என்னை
   உலகத்தில் உதிக்கவைத்தாய் .
   உன்னுதிரம் என்பதனால்
   உன் பெயரே எனது
   முதற்பெயராய் ஆனதன்றோ !.
   கருத்தில் என்னை சுமந்து
    கருத்தாய் எனை வளர்த்தாய்.
    சுமைதாங்கி போல  என்
சுமைகளை நீ தாங்கி
சுகங்களை எனக்களித்தாய்
கரம் பிடித்து நடக்க வைத்தாய்
தோள்  சுமந்து சிரிக்க வைத்தாய் .
கேட்டதை  வாங்கித்தந்தாய்
கெட்டதை விலக்கச் சொன்னாய் .
    அறிவு பெறுக வைத்தாய் .
    அகிலம் புரிய வைத்தாய்
    சான்றாக  வாழ்ந்து  -என்னை
    ‘சான்றோனாக்கி வைத்தாய்.
    பாசத்தை  வெளிக்காட்டாது
    பாசாங்குகள் செய்யாது
   நேசமுடன் என் தேவைகளை
    நிறைவேற்றி நெகிழவைத்தாய் .
    கஷ்டம் தெரியாமல் நான் வளர
    கஷ்டங்கள் பல தாங்கி  -என்
    இஷ்டங்கள் பூர்த்தி செய்தாய்
     கண்கலங்காது நான் வாழ
    எண்ணற்ற தியாகம் செய்தாய் – நீ
     கண் கலங்கிப் பார்த்ததில்லை .
     கண்ணீரை அடக்கிவைத்தாய்
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு- எனக்கு
உன்நன்றி கொன்றால் உய்வில்லை.
    பெற்ற  கடன்  நீ தீர்த்தாய்  – உன்னை
    இறுதிவரை பாதுகாத்து
பிள்ளைக்கடன் நான் தீர்ப்பேன் . .
எந்தையே , தந்தையே ,  விந்தையே ,
உனை மறவாதென்  சிந்தையே .
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
21.06.2020.

News

Read Previous

பாரதியின் “குயில் பாட்டு” பாடுவோம்

Read Next

தமிழகத்தில் இஸ்லாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *