கலிமா

Vinkmag ad

எம் உயிரினும் மேலான தாஹா நபி(ஸல்)அவர்களின் மறைவு செய்தி கேள்விப்பட்டு ஆற்றொணா துயரம் அடைந்த நபி தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள்,யாராவது அண்ணலார் மறைந்து விட்டார்கள் என சொன்னால் அவரது தலையை வெட்டுவேன் என்று கர்ஜித்தார்கள்.

இந்த செய்தியறிந்து ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களை சந்தித்து பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் அண்ணலாரின் மறைவு இறைவன் விதித்தது தான் என இங்கிதமாக உணர்த்தினார்கள்.

மனிதனாய் பிறந்திட்ட போதே மரணத்தை தலையில் எழுதி கொண்ட பிறகு மரணம் அவனை தொட்டு விடக் கூடாதென்று நினைப்பது இறை விதிக்கு எதிரானதே.

மரணிக்கும் போது ஷஹாதத் கலிமாவை நாவிலும் உள்ளத்திலும் மொழியக் கூடிய நசீபு உள்ளவர்களே சிறந்த மானுடர்களாய் நாளை மறுமையில் இறைவன் முன் நிற்பார்கள்.

இத்தைகைய நசீபு கிடைக்கப் பெறாதவர்கள் எத்தனை பெரிய பதவியை அலங்கரித்தவர்களாக இருந்தாலும் இறையை மறுத்தவர்களாய் மரணிக்கும் போது அவர்கள் ஒதுங்குமிடம் நரகம் மட்டுமே.

இறைவன் நம் அனைவரையும் மரணத்தின் தருவாயிலும் கலிமா மொழியும் நன் மக்களாய் மரணிக்க செய்வானாக.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது

Read Next

சிறைக் கைதிகள் .. !

Leave a Reply

Your email address will not be published.