ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்!
————————————–
மக்கள் மனதின் மனித நேயத்தை,
மத நல்லிணக்கத்தை உலகுக்கு
இனங் காட்டிய கொரோனா!
——————————————————
அவதூறு, அவமானங்கள் எல்லா
வற்றையும் தாங்கிக் கொண்டு,அவைகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பிற உயிரை காப்பாற்ற தன் உடலிலிருந்து
பிளாஸ்மாவை கொடுக்கும் கண்ணிய இஸ்லாமியர்களை இந்த உலகிற்கு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

இந்து தோழியை சந்திக்க வந்த
முஸ்லிம் பெண், ஊரடங்கால் தோழியின் வீட்டிலேயே தங்கி விட, அந்த முஸ்லிம்
பெண் நோன்பு பிடிப்பதற்கு, இந்து
பெண்மணி அதிகாலையில் எழுந்து
சமையல் செய்து கொடுத்ததை, அந்த
உயரிய பண்பை அன்பை உலகுக்கு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

முஸ்லிம் மக்கள் நோன்பு பிடிப்பதற்கு
தோதாக பல ஊர்களில் அருமையான
இந்து சகோதர மக்கள்,தங்களது சொந்த
செலவில் உணவு சமைத்து கொடுத்து
வருகின்றனர். அந்த அன்பு நெஞ்சங்களை, அவர்கள் மனதில் உள்ளடங்கி கிடக்கும்
மனித நேயத்தை வெளி உலகுக்கு
கொண்டு வந்து, மத நல்லிணக்கத்தை
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

தினக்கூலிகள் ஊரடங்கால் வேலை
இல்லாமல், வருமானம் இல்லாமல்,
சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல்,
உண்ண உணவின்றி, உறங்க உறைவிட
மன்றி நாடெங்கும் தத்தளிக்கும் நிலை
யில்,அவர்களை தேடிச் சென்று தங்களால்
முடிந்த உதவிகளையும் உணவு பொட்டலங் ளையும் வழங்கி வரும் அனைத்து சமய மக்களையும் நன்றியோடு உலகுக்கு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

இறந்து விட்ட இந்து சகோதரனை
இடு காட்டுக்குத் தூக்கிச் செல்ல அவரது
சொந்தங்களே முன் வராத நிலையில்,
கண் கலங்கி நின்ற அந்த குடும்பத்திற்கு,
இதோ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி,
அந்த பகுதியில் வசிக்கின்ற 6 முஸ்லிம்
இளைஞர்கள், இறந்த அந்த இந்து
சகோதரரின் உடலை, பல கிலோ மீட்டர்
தூரம் தூக்கிச் சென்று இந்து முறைப்படி
இறுதிச் சடங்குகள் நடத்தியதை உலகுக்கு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

உலகில் எங்களை வீழ்த்த எவருமிலர்
என்று மார் தட்டியவர்களெல்லாம்,
வேரறுந்து சாய்ந்த மரமாய் வீழ்ந்து கிடப்பதையும், தன்னடக்கமின்றி தரணி
யில் வாழ்ந்து, பாரினில் எமக்கிணை உண்டோ…? என்று பறை சாற்றியவர் களெல்லாம், தங்களிடம் உள்ள அனு ஆயுதத்தால்,படை பலத்தால் செல்வ செருக்கால் கொரோனாவின் கொடிய
பிடியிலிருந்து மீள முடியவில்லையே……,
எங்களை காப்பாற்றிக் கொள்ள எந்த வழியுமில்லையே…என்று கதறுவதையும், கண்ணீர் சிந்துவதையும் உலகுக்கு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!

காவலர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள்,செவிலியர்கள் மற்றும்
தூய்மைப் பணியாளர்கள் என இவர்கள் அனைவரும் தன்னுயிரைப் பொருட்
படுத்தாது பணியாற்றி வருவதையும்,
அந்த பணியில் தன் உயிரையும் ஈந்த அந்த
சேவையாளர்களை குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மூடக் கொள்கையின் அறிவீனர்களையும்,
உலகோர்க்கு வெளிச்சம் போட்டு
இனங் காட்டிய கொரோனா வாழ்க!.

இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று!

இறைவன் நாடினால் ஒரு நொடியில்
இந்த உலகை புரட்டிப் போட்டு விட
முடியும். அவனுக்கு நம்மை அழிக்க
எவ்வித அனு ஆயுதமும் தேவையில்லை.
அற்ப கொசுவை வைத்தே நம்மை அவன்
அழித்திட முடியும். இதோ கண்ணுக்குத்
தெரியாத அற்ப கொரோனா வைரஸ். இதிலிருந்து கூட மீள முடியாத மனிதன், இறைவனின் ஆற்றலை சந்தேகிக்க முயல்கிறான்.அதன் பலனைத்தான்
இன்று அனுபவிக்கிறான்.மனிதன் இதில்
இருந்தாவது பாடம் பெறுகிறானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இது இறைவனின் சோதனையாக
இருப்பதால்தான் உலகம் அழியாமல்
காப்பாற்றப்பட்டுள்ளது.இதுவே அவனது
கோபமாக மாறியிருந்தாலோ அதை
நினைக்கவே உடல் சிலிர்க்கிறது.ஆயினும் இறைவன் மாபெரும் கிருபையாளன்.

ஏ.ஆா்.தாஹா(ART)30-04-2020

News

Read Previous

மே தின வாழ்த்துக்கள் .

Read Next

அன்பை விதைப்போம்

Leave a Reply

Your email address will not be published.