ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
———————————————
கொரோனா வைரஸும் முஸ்லீம்களும்
——————————————————————
கொரோனா வைரஸ் உலகையே
புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் மரண பயத்தில் மூழ்கிக் கிடக்கிறர்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணத்
தைத் தழுவியும்,ஆயிரக் கணக்கான மக்கள் மரணத்தின் விளிம்பிலும், மற்றவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உலகமே அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது.

இறைவனுடைய கட்டளைக்கு மாறு
செய்யும் மனிதன் ! தனக்குத் தானே
தீங்கைத் தேடிக் கொள்கிறான். எதை
உண்ணக் கூடாது என்று இறைவன்
தடுத்தானோ அதை உண்ணுதல்,
தவறான உடலுறவுகள், மதுவில் மூழ்கிக்
கிடத்தல் இன்னும் என்னென்னவெல்லாம் மனித குலத்திற்கு தீங்கிழைக்குமோ அவைகளை மனிதன் தனது வாழ்வியலாக கொண்டதின் காரணத்தால் வந்த வினை
தான் கொரோனா என்றால் அது மிகை
யில்லை.

உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு
இழைக்கப்படும் தீங்குகள், கொரானா
வைரஸை விட கொடியது. கொரானாவை
விட கொடியவர்களும் இருக்கிறார்கள். பல வழிகளிலும் முஸ்லிம்களை கருவறுக்கப் அவர்கள் போடும் திட்டங்களும், சூழ்ச்சி சதிகளும் சொல்லுந்தரமன்று.மனிதாபி மானமின்றி, மனித நேயமின்றி, கொஞ்ச
மும் நெஞ்சில் ஈரமின்றி முஸ்லிம்களை துன்புறுத்துவதும், கொன்று குவிப்பதும்,
சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனாலும்
நாம் பொறுமை காக்கிறோம். வல்ல அல்லாஹ்வின் உதவியை மட்டுமே நம்பியிருக்கிறோம். அதன் தாக்கங்களை
யும் பார்க்கிறோம். முஸ்லீம்களுக்கு
இழைத்த தீங்குகளின் வெளிப்பாடுதான்
இந்த கொரோனா என்று புரிந்து கொண்ட
சில நாடுகளும் உண்டு.

கொரோனா வைரசை விட கொடூர
வைரஸ் வந்தாலும், முஸ்லிம்களாகிய
நாம் அஞ்சத் தேவையில்லை. காரணம்
மரணத்தைக் கண்டு அஞ்சக் கூடியவர்
களல்ல நாம். மரணம் எந்த நிமிடமும் ஏற்படலாம் என்பதையும், குறிப்பிட்ட தவணைக்கு ஒரு நொடி முன் பின்னாகக்
கூட நமக்கு மரணம் ஏற்படப் போவதில்லை என்பதும் நமது மார்க்கம் நமக்குத் தந்த
நம்பிக்கை. அதில் நாம் உறுதியானவர்கள்.
ஆகையால் அல்லாஹ்வின் கட்டளையின்றி கொரோனா நம்மை ஒன்றும் செய்து விடப் போவதில்லை.

அன்பிற்கினியவர்களே !
நாம் இப்போது சிந்திக்க வேண்டியது..?
இந்த கொரோனா வைரஸும்,அதன் தாக்கத்தால் உலகளாவிய மரணங்களும் நமது வாழ்வை மாற்றியிருக்கிறதா? நமது
மனதில் மறுமை சிந்தனை உதயமாகி யிருக்கிறதா? இறையச்சத்தை ஊட்டியிருக் கிறதா? நமது நெஞ்சில் அல்லாஹ்வின்
அச்சம் இப்போதாவது ஏற்பட்டிருக்கிறதா? நமது தொழுகை மற்றும் அமல்கள் சிறப்பாக இருக்கிறதா? பாங்கு சொன்ன உடன் பள்ளியை நோக்கி இப்போதாவது நாம் செல்கின்றோமா? அல்லது வழமைப் போல பள்ளிக்குச் செல்லாமல் வீண் விதண்டா பேச்சுகள் பேச, தேனீர் கடைகளையும் மற்ற இடங்களையும் தேடி அலைகின்றோமா
என்று ஒரு கனம் சிந்தித்துப் பார்க்கனும்.

ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம்.?
அனுதினமும் இறையை தொழுது, கரம்
ஏந்தி பிரார்த்திப்பது ஒன்றே இதற்கு வழி
ஹஜரத் நபி யூனுஸ் (அலை) அவர்கள்
மீன் வயிற்றினுள் இருந்து ஓதிய அந்த
துஆவை ஒவ்வொரு பர்ளான தொழுகை
யின் பின்பும் ஓதுவோம். தமிழகமெங்கும்
எல்லாப் பள்ளிகளிலும் இது ஓதப்படுகிறது.

சுனாமி போன்ற எத்தனையோ
இயற்கைப் பேரிடர்கள் உலகையே உலுக்கியப் போதும், வல்ல அல்லாஹ்
நமதூரைப் பாதுகாத்தான்.அதைப்
போன்று கொரோனா வைரஸில் இருந்தும் அல்லாஹ் நம்மையும் நமதூரையும் நமது நாட்டையும் பாதுகாப்பான்.

ஏ.ஆா்.தாஹா(ART)19-03-2020

News

Read Previous

‘’எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல்’’..

Read Next

உலக மகிழ்ச்சி தினம்

Leave a Reply

Your email address will not be published.