உலக மகிழ்ச்சி தினம்

Vinkmag ad
உலக மகிழ்ச்சி தினம் 
எத்தனை கோடி பணமிருந்தாலும்
எத்தனை சொத்துக்கள் சேர்த்திருந்தாலும்   

எத்தனை சொந்தங்கள் நிறைந்திருந்தாலும் 
எத்தனை பதவிகள் வகித்திருந்தாலும்
எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும் 
எவ்வளவு புகழ் அடைந்திருந்தாலும்
அவ்வளவும்  வீணாகிடும்  மனதில் 
எள்ளளவு மகிழ்ச்சி இல்லையெனில் .
 
நம்மைப் பிறரோடு ஓப்பிடாமல்   ,  
நம்மிடம் இருப்பதே போதுமென்றும் 
நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்திடும்போதும் 
நம்முள் மகிழ்ச்சி  நிறைந்திடுமே . 
 
   பிறர்க்குதவுதலில்  மகிழ்ச்சியுண்டு 
   உறுபசி தீர்த்தலில் மகிச்சியுண்டு .
   கற்றற்குதவுதலில் மகிச்சியுண்டு .
    உறுபிணி தீர்த்தலில் மகிழ்ச்சியுண்டு .
    உயிர்காத்தலில் மகிழ்ச்சியுண்டு . 
    ஆதரவற்றோர்க்குதவுதலில் 
   ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியுண்டு.
    பிறர் மனம் புண்படாமல்  ,இன்சொல் 
    பேசி, நடத்தலில் மகிழ்ச்சியுண்டு .
சாதி, இனம், மொழி ,  மதமென்று  
வேற்றுமை எதிலும் பாராமல் , 
ஏழை, பணக்காரன் எனும் 
ஏற்றத்தாழ்வுகள் பாராமல் , 
மனித இனத்தோர் அனைவரையும் 
மனதில் சமமாய்  நினைத்தபடி 
நீதி நெறிப்படி வாழ்வதில்தான்
நெஞ்சில் மகிழ்ச்சி நிறைந்திடுமே . 
 
மகிழ்ச்சி எங்கே உள்ளதென்று 
மற்றவை எதிலும்  தேடாதீர் . 
மகிழ்ச்சி மனதில் இருந்துவிட்டால் 
மற்றவை எல்லாம் மகிழ்வாகும்  .
😀😃😄😉😊☺🤗😇
மகிழ்ச்சியுடன் ,🌋🎉
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
20.03.2020  . 

News

Read Previous

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Read Next

முயற்சி திருவினை ஆக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *