உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்

Vinkmag ad
உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்(அல்குர் ஆன்:2-195).
உலகில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளையும்,கஷ்டங்களையும்,வறுமைகளையும் சந்திப்பதை நாம் காண முடிகிறது.
இறையச்சம் உள்ள மனிதன் அதனை இறைவன் புறத்தில் ஒப்படைத்து விட்டு தன்னை பொறுமையின் பக்கம் நுழைத்து விடுவான்.
இறையச்சம் இல்லாத அல்லது முஃமீன் முஸ்லிமல்லாத மனிதன் அந்த சோதனைகளை தாங்கி கொள்ள முடியாமல் தன்னை தானே மாய்த்து கொள்கிறான்.
இப்படிப்பட்ட மனிதர்களை பார்த்து இறைவன் சொல்கிறான்:”உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்.நிச்சயமாக அல்லாஹ்,உங்களிடம் மிக கிருபையுடையவனாக இருக்கிறான்”(4-29)
இறைவனின் மேற்கண்ட இறை வசனங்களை கொஞ்சம் அமைதியாக படித்து அதன் பொருளை உள்வாங்கினால்…பல்வேறு அர்த்தங்களை அது கொடுக்கும்.
தன்னை தானே மாய்த்து கொள்ளுதல் என்பது தற்கொலை மட்டுமல்ல,போதை வஸ்துக்களுக்கு தன்னை அடிமைப்படுத்தி கொள்வதையும் கூட அது குறிக்கிறது.
பான்பராக்,சிகரெட்,மது போன்ற போதை தரும் வஸ்துக்களை பயன்படுத்துவோர் கொஞ்சம்,கொஞ்சமாக தங்களை அழிவின் பக்கம் நெருக்கி வருகிறார்கள் என்பதே பொருளாகும்.
ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால்,அவன் தன் அருகில் இருப்போருக்கு இடைஞ்சல் செய்யமாட்டான்(நபிமொழி-புகாரி)
வெங்காயம் அதன் இலை,பூண்டு போன்ற உணவை உட்கொண்ட நிலையில் யாரும் தொழுகைக்கு வரவேண்டாம்.ஏனென்றால்,அந்த வாடையால் பிற மனிதர்கள் நோவினை அடைவதோடு மலக்குகளும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்(நபிமொழி-புகாரி,முஸ்லிம்)
சாப்பிட அனுமதிக்கப்பட்ட வெங்காயம்,பூண்டுகளை சாப்பிட்டால் கூட அந்த வாடையோடு பள்ளிக்குள் வராதீர் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை மீறும் வகையில் நம்மில் பலரும் பீடி,சிகரெட் என்னும் நிகோடின் கலந்த வாடையோடு தொழுகைக்கு வருவது வேதனைக்குரியதே.
அருகில் நிற்போர் அந்த துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் காட்சிகளையும் நம்மால் காண முடிகிறது.இப்படிப்பட்ட மனிதர்களை பற்றி தான் நபிகளார் இவ்வாறு எச்சரிக்கிறார்கள்:-
“எந்த மனிதனின் அண்டை வீட்டான் அவனின் துன்புறுத்தல்களை கண்டு அஞ்சி கொண்டிருப்பானோ…அவன் சுவனம் புகமாட்டான்”.
இந்த ஹதீஸின் மூலம் இன்னொரு விசயத்தையும் நம்மால் உணர முடிகிறது.
தொழுகையின் போது பீடி,சிகரெட் போன்ற துர்நாற்றம் வீசும் வாடையோடு எந்த மனிதன் பள்ளிக்குள் வந்து பிற தொழுகையாளிகளின் முகம் சுளிக்க வைக்கிறானோ…அவனும் இறை கோபத்திற்குரியவன் தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னதான் மனவேதனை நம்மை சூழ்ந்து கொண்டாலும் அதற்கான தீர்வை படைத்தவனிடம் கேட்க வேண்டுமே தவிர,நம்மை நாமே அழித்து கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு நல்லோர்களாய் வாழ முயற்சிப்போம்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

News

Read Previous

ஆட்டுவிக்கும் புள்ளிகள்

Read Next

நாயகம் எங்கள் தாயகம்

Leave a Reply

Your email address will not be published.