அரிய நூல்களை கேட்கும் தமிழ் வளர்ச்சி துறை

Vinkmag ad

சென்னை: தமிழகத்தில் கிடைக்காத, 17, 18, 19ம் நூற்றாண்டு களைச் சேர்ந்த, அரிய நூல்கள் இருந்தால், எங்களுக்கு வழங்க வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கிடைக்காத, வெளிநாட்டு நூலகங்களில் உள்ள, அரிய தமிழ் நூல்களை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்து, நூலாக வெளியிடும் பணியை, 1 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, தமிழ் வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது.

எனவே, 17, 18, 19 ஆகிய நூற்றாண்டுகளைச் சேர்ந்த, அரிய நூல்கள், பொதுமக்களிடம் இருந்தால், ‘தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், ஹால்ஸ் சாலை, எழும்பூர், சென்னை – 08’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, 044 – 2819 0412, 044 – 2819 0413 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

News

Read Previous

ஆர்.டி.ஓ., ஆய்வு

Read Next

சரவண பொய்கை ஊரணியில் மழைநீர் தேக்கம்

Leave a Reply

Your email address will not be published.