அரபுத் தமிழ்

Vinkmag ad
தமிழ்நாட்டில் குடியேறிய அரபிகள் தமிழைக் கற்றுக் கொண்டதுடன் அதனை அரபி எழுதுக்களினாலும் எழுதினர். இதுவே அரபுத் தமிழ் எனப் பெயர் பெறலாயிற்று. தமிழில் உள்ள ள, ழ, ண, ட போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் ஒலி இல்லாததால் அவற்றிற்கு சற்று முன்பின் சம ஒலியுள்ள அரபி எழுத்துக்களுக்கு சில அடையாளங்களை அதிகப்படியாகச் சேர்த்து அவ்வொலிகள் இதில் ஏற்ப்படுதப்பட்டுள்ளன.
தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன.  ஆனால் அரபுத் தமிழிலோ அரபி எழுத்துக்கள் 28 உடன் 8 எழுத்துக்கள் மேற்கொண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
அரபுத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது அரபு வங்காள மொழியாகும். இதைப் பற்றி இப்னு கல்தூனும் தம்முடைய உலக வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இதற்க்கு முன்னர்த் தென் கிழக்கு ஆப்ரிக்காவில் தன்சானியா நாட்டில் சுவாஹிலி மொழி, அரபி எழுதுக்களினாலும் எழுதப்பட்டது.
மலேசியாவிலும் “ஜாவி” மொழி அரபி எழுத்துக்களால்  தாம் எழுதப்பட்டு வருகிறது. துருக்கி மொழி துவக்கத்தில் அரபி லிபியில் தான் எழுதப்பட்டு வந்தது, பின்னர் முஸ்தபா கமால் காலத்திலயே அதனை ரோம லிபியில் எழுதும் பழக்கம் புகுத்தப்பட்டது. உஸ்பெக் மொழியும் அரபி லிபியிலயே எழுதப்பட்டு வந்தது. இப்போது ரோம லிபியில் எழுதப்பட்டு வருகிறது. கேரளத்திலும் அரபு மலையாளத்தில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மொழியான ஹிந்தியை அரபி எழுத்துக்களில் எழுதத் துவங்கியதன் விளைவாகவே உர்து தோன்றியது.
அரபு தமிழில் ஏறத்தாழ நூற்று ஐம்பதுக்கு மேற்ப்பட்ட மார்க்க நூல்கள் வெளிவந்துள்ளன. திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத் தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும் வெளிவரலாயின.
குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டண்திலிருந்து வெளிவந்தவை.
காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் “கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்” என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து “அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.
பொதுவாக ஆண்களைவிட பெண்கள் தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது.
தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உர்து சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்தப் பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள  சாதாரண  சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலததாயிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாக தாக்கினர். இழித்தும் கூறினார்.
அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களை படிக்கும் ஆர்வம் அற்று பொய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது.
 ” அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்” என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர். அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி ” பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்” என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.
(தகவல்: இஸ்லாமிய கலைக் களஞ்சியம் – முதல் பாகம் – பக்கம் 421)

 

 

 

நண்பர் கஜ்சாலி அவர்களுக்கு,

அன்புள்ள திண்டுக்கல் ஜமால் எழுதிக்கொள்வது,
அரபு தமிழ் பற்றிய தகவல்கள் மிக்க பயனுள்ளதாக இருந்தது, நான் சிறுபிள்ளையாக இருந்தபோது “நூர் நாமா,இனாயத் நாமா போன்ற மார்க் பிக்ஹு நூல்களை மக்தப் மதரசாக்களில் படித்தது இன்றும் பிரயஜோனத்தை தந்துகொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு,
ஜமால் மைதீன்
துபை
jamal1278@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). கீழே உள்ள செய்தியில் தவறு
உள்ளது என்று நினைக்கிறேன். தயவு செய்து திரும்பவும் படித்துப்
பார்க்கவும். தவறு இருந்தால் திருத்தி வெளியிடவும்.”திருக்குரானுக்கு தமிழில் விளக்கவுரை எழுதக்கூடாது என மார்க்க
விற்பன்னர்கள் பெரிதும் வற்புறுத்தி வந்ததன் காரணமாக அரபுத்
தமிழில் தப்சீர்களும், ஏனைய இஸ்லாமிய நூல்களும்
வெளிவரலாயின.”வஸ்ஸலாம். நஜுமுதீன்.
Najumudin Habeeb <najumudin@rediffmail.com>
இக்கட்டிரை பகிர்வுக்கு நன்றி திரு.முதுவை ஹிதாயத்.
 Subashini Tremmel <ksubashini@gmail.com>
அல்லாமா ஆ கா அப்துல் ஹமீது பாகவி என்பார் செய்த ‘தர்ஹுமதுல் குர்ஆன்’ என்னும் அரபி மூலத்துடன் கூடிய தமிழ் மொழி பெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன். ஆறாம் பதிப்பு 1986ல் வந்தது. 1926 ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சி 23 ஆண்டுகள் உழைப்பால் 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது பற்றி முகவுரையில் படித்ததுண்டு. அரபி மூலத்துடன் மிகச் சரியாக ஒப்பிட்டுப் பார்த்துக் கடும் உழைப்பால் செய்த மொழிபெயர்ப்பு என்று விவரங்கள் தெரிவித்தன. அதைப் பற்றியும் மேலதிகத் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்.
Mohanarangan V Srirangam <ranganvmsri@gmail.com>
திரு முதுவை ஹிதாயத்  அவர்களே வணக்கம்
இன்னமும்  நிறைய விவரங்கள் அறியத் தாருங்கள்    (  21ம் தேதி துபாய் வருகிறேன்  மீண்டும் சந்திப்போம்)
அன்புடன்
தமிழ்த்தேனீ​
 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>

News

Read Previous

முதுகுளத்தூரில் விரைவு பட்டா மாறுதல் முகாம்

Read Next

ஸ்ரீ வரகதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *