வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை

Vinkmag ad

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலனுக்காக கேரளாவில் செயல்படும் பிரவாசி திட்டம் போல தமிழ்நாடு அரசும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே எஸ் மஸ்தான் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான
நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றி தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள்.

அதேபோல அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாட்டு வாழ் கேரள மக்களின் நலனுக்காக ‘பிரவாசி திட்டம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்தி வெளிநாட்டு வாழ் கேரள மக்கள், கேரள அரசுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பயனடையுமாறு பல்வேறு சிறப்பம்சங்களோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் வெளிநாட்டு வாழ் கேரள மக்களுக்கான அடையாள அட்டை, காப்பீட்டு திட்டம் என பல்வேறு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல தமிழகத்திலும் வெளிநாட்டுவாழ் நலத்துறை அமைச்சகம் சிறப்பு திட்டத்தை உருவாக்கி வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நேரடியாக பயனடையும் வண்ணம் அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக பேரிடர் மற்றும் நெருக்கடி காலங்களில் வெளிநாட்டு வாழ் மக்கள் பெரும் துயரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் பணி புரியும் நிலையில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படுமாயின் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையும் உள்ளது.

எனவே இதுபோன்ற சூழல்களை எல்லாம் கருத்தில் கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தமிழ்நாடு அரசை நேரடியாக தொடர்பு கொண்டு பயனடையும் வண்ணம் சிறப்பு திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கே நவாஸ்கனி
மாநில துணைத் தலைவர்-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.

News

Read Previous

உயிர் காற்று பெறவே…

Read Next

அசாம் முதல்வரின் பாகுபாடு கொள்கை

Leave a Reply

Your email address will not be published.