ராமநாதபுரம் தொகுதி

Vinkmag ad

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம். காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை. ராஜா சேதுபதி. அவர் அந்த சமஸ்தானத்து அரசர். அரசர் நிற்கிறார் என்பதால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை. காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள் ?
அண்ணா அன்றைய மாவட்ட செயலாளர் தென்னரசுவிடம் ராமநாதபுரம் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். தென்னரசு அண்ணாவிடம் ராஜா காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதாகவும் திமுகவினர் ஒருவர் கூட தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்ற செய்தியை சொல்ல, அண்ணா நெடுஞ்செழியனிடம் ஆலோசனை கேட்க அவரும் நாம் ராமநாதபுறம் தொகுதியயை விட்டுக்கொடுத்த
ிடலாம்னு சொல்ல அண்ணாவும் தேர்தலில் நின்று அந்த சமஸ்தானத்து ராஜாவை பகைத்துக்கொள்ளவேண்டுமா என்றெண்ணி வேறு வழியின்றி புறக்கணிக்க முடிவு செய்யும் வேளையில் உள்ளே நுழைகிறார்.
உங்களுக்காக அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசியது உரையாடல் வடிவில்,
கலைஞர் : ராமநாதபுரத்துக்கு ஆள் இல்லைனு விட்டுகுடுக்கறேனு சொன்னிங்களாமே ?
அண்ணா : அமாம்.
கலைஞர் : திமுகவுல ஆள் இல்லனு சொன்னவன் எவன் ?
அண்ணா : தென்னரசு மாவட்ட செயலாளர்தான் கருணாநிதி சொன்னாரு.
கலைஞர் :அண்ணே தென்னரசு அங்க போகல அதான் சொல்லிருப்பாரு.
(தென்னரசு கலைஞருக்கு ரொம்ப நெருக்கமானவர், இவருக்கும் அவருக்கும் ஒரு புரியுதல் உண்டு)
தென்னரசு சொன்ன நம்பறதா ? பாருங்க நான் மன்னாதி மன்னனையே கொண்டாந்திருக்கேன். சேதுபதி என்ன சேதுபதி அவரையே தூக்கி சாப்பிடற மாதிரி ஒரு ஆள கொண்டாந்திருக்கேன்.
அண்ணா : ஏம்பா கருணாநிதி ராஜாவை எதிர்த்து நிற்க ஆளிருக்கா ?
கலைஞர் : ஆமாண்ணே. இதோ இங்கபாருங்க.(வேட்பாளரை அழைக்கிறார் கலைஞர்)
அண்ணா : உங்க பேர் என்ன ?
வேட்பாளர் : தங்கப்பன்
அண்ணா : என்ன செஞ்சிடிருக்கிங்க ?
வேட்பாளர் : பஸ் ஸ்டாண்டில் குதிரை வண்டி ஓட்டறேன்.(அண்ணா ஆடிப்போய்விட்டார் )
அண்ணா கலைஞரிடம்: ராஜவ எதிர்க்கற ஆளு? கருணாநிதி, ராஜவ எதிர்த்து நிற்க ஒரு ராசா வேஷம் போட்டவன்கூடவப்ப
ா உனக்கு கிடைக்கல ?
கலைஞர் : நீங்க நிறுத்தணும்ங்க.
அண்ணா : இத பார் கருணாநிதி ஒன்னு நம்ம கேவலப்படக்கூடாது, ராசாவையும் கேவலப்படுத்த கூடாது. அதனால விட்டுக்கொடுத்திடலாம்.
கலைஞர் : பாருங்க ஜெயித்தாலும் தோத்தலும் நமக்கு வெற்றிணா.
அண்ணா : எனக்கே பேச சொல்லித்தறியா நீ ?
கலைஞர் : இல்லண்ணா,ஜெயித்தாலும் தோத்தலும் நமக்கு வெற்றிணா.
அண்ணா : எப்படி ?
கலைஞர் : ராஜா ஜெயிச்சா ? என்னய்யா பெரிய வெற்றி? ஒரு குதிரை வண்டிக்காரரை எதிர்க்க பெரிய ராஜா!! ஜெய்சுப்ட்டிங்களோ ? பெரிய தேசத்தலைவரை எதிர்த்து நின்னீங்களாக்கும்? அப்படி அடிச்சுடலாம்ணா. நாம ஜெயசாச்சுனா? மன்னனே காலி. அப்படி அடிச்சிடலாம்ணா.
அண்ணா : என்ன சொல்ற கருணாநிதி ?
கலைஞர் : நிறுத்துங்க. நானாச்சி.
அண்ணாவும் ஒத்துக்கொண்டார்.
ராஜா சேதுபதி, “யார்ரா என்னை எதிர்த்து நிக்கறது” என்று கேட்க, “நம்ம பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன்” அவரின் பணியாள் சொல்ல, மன்னருக்கு தங்கப்பன் யாருனே தெரியாது, “என்ன செய்யறான் அவன்”, மன்னர். “குதிரைவண்டி ஓட்டுகிறான்” பணியாள் சொல்ல, “நிக்கவெச்சது யாரு”னு மன்னர் கேட்க, திமுகவினர் என்று பதில் வரவே, ராஜாவிற்கு ஜெய்துவிட்ட தோரணை. “இதுக்கு மேலயும் நான் தேர்தல்ல வந்து பிரச்சாரம் செய்யணுமா?” அன்று அரண்மனைக்குள்ளே போனவர் தான் வெளியில் வரவே இல்லை. காரணம் தான் ஒரு ராஜா தன்னை எதிர்த்து நின்னு யாராலும் வெல்ல முடியாது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது ராஜா சேதுபதியிடம்.
தேர்தல் பணிகளுக்கு நடுவே கலைஞர் தொலைபேசியில்,”ராமநாதபுரம் எப்படி இருக்கு” என்று கேட்க, ராஜா அரண்மனையில் இருந்து வெளியே வந்து ஒட்டு கேட்காததை சொன்னார்கள் திமுகவினர். “சரி கவலையில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு கருணாநிதி வருவதாக அறிவித்து விடுங்கள்”.
கலைஞர் வந்தார். இறுதி நாள் பிரச்சாரத்தின் போது. “மக்களை மதிக்காத மன்னனை பார்த்தீர்களா ? ஒரு ஏழை உங்கள் வீட்டிற்கு வந்து காலில் விழுந்து ஓட்டு கேட்கிறான், நீங்கள் முடிவெடுங்கள், மதிக்காத மன்னனுக்கு உங்கள் ஒட்டா ? உங்களுக்காக பாடுபடுவேன்னு சொன்னவனுக்கு உங்க வோட்டா?” என்று சொல்லி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் கலைஞர் கருணாநிதி. கடைசி நேர பரப்புரை தேர்தலையே மாற்றிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானது. ராஜா சேதுபதியை விட 8000 வோட்டுக்கள் அதிகம் பெற்று பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன் வென்றார். இது வரலாறு.
இப்ப சொல்லுங்கய்யா. கலைஞர் எப்பேர்பபட்ட அசகாய சூரன்? அதை விட்டுவிட்டு, நெடுஞ்செழியன் வந்திருந்தா நல்ல இருக்கும், மதியழகன் வந்திருந்தா நல்ல இருக்கும்னு காமெடி பண்ணிக்கிட்டு. ஒரு வேளை யாராவது அண்ணாவை, உங்களுக்கு பின்னால் யார் தலைமை பதவிக்கு வரலாம்னு கேட்டிருந்தால், நெடுஞ்செழியன் வந்தால் கட்சிக்கு பேர் ஆனால் கருணாநிதி வந்தான்னா கட்சி ஆட்சி ரெண்டுயுமே நல்லா நிர்வாகம் செய்வான் என்று கூறியிருப்பார்.
அது தான் கருணாநிதி.
நன்றி: எழுத்தாளர் திரு ஆர்.முத்துக்கும
ார்.
மீண்டும் சந்திப்போம்.
அடுத்து, தேர்தலில் வெற்றி.
# kalaignar94
நன்றி. ; முரளிதரன்.பி.பி.

News

Read Previous

சுவனத் தென்றலின் சுவை!

Read Next

பொது சுகாதாரத்தின் முக்கியத்துவம்

Leave a Reply

Your email address will not be published.