பொது சுகாதாரத்தின் முக்கியத்துவம்

Vinkmag ad

பொது சுகாதாரத்தின் முக்கியத்துவம்

 

தற்போதைய கொரோனா தொற்றுநோயின் பின்னணியில், உலகில் எல்லா இடங்களிலும், பொது சுகாதாரம் ஒரு முக்கியமான கோரிக்கையாக மாறியுள்ளது. ஆனால், இந்தியாவின் பொதுசுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் சில அறிவுஜீவிகளைத் தவிர எளிய பொதுமக்களால்                       முன்வைக்கப்படவில்லை என்பது அசாதாரணமானது.

பொது சுகாதார கோரிக்கை ஏன் இந்தியாவில் இன்னும் அதிக முக்கியத்துவம்பெற வில்லை என்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இந்தியாவில் பெரும்பகுதியாக இருக்கும் உழைக்கும் மக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்கே பெரும்பாடுபட வேண்டிய நிலையில் இருக்கும்போது அவர்களின்  முன்னுரிமை

யிலிருந்து இந்த கோரிக்கை விலகி நிற்கிறது.   இரண்டாவதாக அவர்கள் பொது சுகாதாரம் இல்லாமலே வாழப் பழக்கப்பட்டி ருக்கிறார்கள்; இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அதை எதிர்பார்க்கக்கூட இல்லைஎன்ற நிலைக்கு வந்து விட்டனர். மூன்றாவதாக, கோவிட்டுக்கு முந்தைய நாட்களிலேயே கூட,ஏழைகள் பொது சுகாதாரத்தினை தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஏனெனில் அவை அந்த அளவிற்குதான்பராமரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

கார்ப்பரேட் மருத்துவம் இந்ததொற்று நோயை இலாபங்களுக்கான வாய்ப்பாகக் காண்கிறது. ஊரடங்கு தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு,கோவிட் -19 சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மட்டும் ஒரு நாளைக்கு 5000 ரூபாய்  தொடங்கி வெண்டிலேட்டர்  பயன்பாட்டுடன் ஒரு நாளைக்கு ரூ.9000 வரை வசூலிக்கப்படுகின்றன. நடுத்தர வர்க்க நோயாளிகளுக்கே கூட இந்த  செலவினைத் தாங்க முடியாது எனும்போது ஏழைகளைப் பற்றி சொல்வதற்கில்லை. பொதுப் பயன்பாட்டிற்கு படுக்கைகளை கிடைக்கச் செய்ய வேண்டும்என்று வற்புறுத்துவதை விடுத்து, தனியார் துறையை ஒத்துழைப்புக்காக வற்புறுத்துவதில்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.

உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பொது சுகாதாரத்தை அலட்சியம் செய்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதனை மக்களும் ஊடகங்களும் புரிந்து கொண்டு, பொது சுகாதார முறையின் இன்றியமையாத பங்கை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்..அந்த நாடுகளிளெல்லாம் சுகாதாரப் பாதுகாப்பை தனியார்மயமாக்குதல் என்ற கருத்துக்கு ஒரு திட்டவட்டமான எதிர்ப்பலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அத்தகைய சிறு சலசலப்பு கூட  இந்தியாவில் காணப்படவில்லை. பொது சுகாதாரத்திற்காகப் போராடுவது என்பது நாட்டின் அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளுக்கும் முன் முக்கியமான ஒரு கடமையாக எழுந்துள்ளது.

– விஞ்ஞானி  டி.  ஜெயராமன்   பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் எழுதியுள்ள  கட்டுரை.. தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்

News

Read Previous

ராமநாதபுரம் தொகுதி

Read Next

எம்ஜிஆர்- என் டி ஆர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *