புலம்பெயர் தொழிலாளர்

Vinkmag ad

# இந்த நூற்றாண்டின் மிக மிக மோசமான, துயரகரமான மனித இடப்பெயர்வின் தாக்கத்தை வரும் ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் உணரும். (கொரோனா தொற்றினால் இந்தியாவில் இதுவரை 4500-க்கு மேல் உயிரிழந்து விட்டனர்). மத்திய அரசு, தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையாமல் இருக்க, மனித ஆரோக்கியமும் பொருளாதாரத்தின் ஆரோக்கியமும் இன்னும் கொடிய நிலைமையை எட்டாமல் இருக்க, உடனடியாக ஊரடங்கிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என்பதை மக்கள் முன்னால் வெளிப்படுத்தியாக வேண்டும்.

# புலம்பெயர் தொழிலாளர்களுடன் பயணித்த 40 ரயில்கள் கோரக்பூருக்கு பதிலாக ஒடிசா மாநிலத்திற்கு சென்றன. இவ்வாறு ரயில்கள் சென்ற பாதை மட்டுமல்ல; இதில் பயணித்த உழைப்பாளிகளுக்கு உணவு, குடிநீர் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. கிருமி நாசினிகள் இல்லை. கொள்ளை நோயின் பொழுது மத்திய அரசாங்கத்தால் இந்த தேசத்தின் மீது திணிக்கப்பட்ட கொடூரமான மனித நெருக்கடியின் இன்னொரு உதாரணம் இது!

# கடந்த சனிக்கிழமை மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூருக்கு ஷ்ரமிக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 46 வயது புலம் பெயர் தொழிலாளியான ரவீஷ் யாதவ், உணவும் குடிநீரும் இல்லாமல் மயங்கிய நிலையில் வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்தை நெருங்கியபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாலைகளிலும் சரி, ரயிலிலும் சரி, நமது தேசத்தின் கடின உழைப்பாளிகள் அதே துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான நாட்களில் கூட இந்த ரயில்களில் உணவும் நீரும் வழங்கப்படுமே, அது ஏன் இப்போது வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் ஏழைத் தொழிலாளிகளின் உயிர்  அத்தனை மட்டமா? மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்.

# பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு புத்துயிர்  அளிக்க  இயலாது. இந்த அறிவிப்பின் நோக்கம் பழைய திட்டங்களை புதிய பெயரில் அறிவிப்பதும், ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி தேசத்தின் சொத்துக்களை வேகமாக தனியாருக்கு விற்க செய்வதும்தான்!  இந்தத் திசைவழி இந்தியாவின் பொருளாதார சுயசார்புக்கும் நமது மக்களின் நலவாழ்வு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது.

-(சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஎம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து)

 

News

Read Previous

பக்தா

Read Next

முதற் சங்க காலம்

Leave a Reply

Your email address will not be published.