முதற் சங்க காலம்

Vinkmag ad
முதற் சங்க காலம்
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
நாலாயிரம் ஆண்டுகட்கு 
முன்பே
ஓங்கி வளர்ந்தது
நைல் நதி நாகரீகம்.
ஆகா வென்று எழுந்தன
பிரமாண்ட
பிரமிடுகள் எகிப்தில் !
ஃபெரோ மன்னர் உடல்கள்
பொற்பேழையில்
சிற்பங்கள் ஆயின.
பத்தாயிரம் ஆண்டுக்கு 
முன்பு
சேர, சோழ,
பாண்டிய
தமிழ் வேந்தர்கள் 
புலவர் அரங்கைக் கூட்டி
முதற் சங்கம்,
இடைச் சங்கம்
அமைத்தது
பாரத முதன்மை அங்கம்.
வால்மீதி 
இராமாயணம் 
எழுதும் போது பாண்டிய 
நாட்டின் இருப்பைக்
காட்டுகிறார்.
இராமன் கால்வைத்த
இராமேசுவரம்
ஓர் பண்டை ஊரானது.
தொல்காப்பியர் குரு 
அகத்தியர் 
அப்போது தமிழுக்கு
இலக்கணம்
வகுத்தார்.
பனியுகக் கடற் தணிவு
மேல் எழுச்சி 
விழுங்கும் 
முதலிடைச் சங்கப்
படைப்புகள்.

News

Read Previous

புலம்பெயர் தொழிலாளர்

Read Next

பாலஸ்தீன விடுதலை இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *