பாலஸ்தீன விடுதலை இயக்கம்

Vinkmag ad

மே 28,1964 – PLO -பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வமைப்பு அரபு லீக் இனால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நிறுவனத் தலைவராக யாசர் அராபத் பதவி வகித்தார். இவ்வமைப்பினுடைய துவக்க கால குறிக்கோள், ஆயுதப்போராட்டம் ஒன்றின் மூலம் இஸ்ரேல் நாட்டு அரசினை அழித்தொழித்து சுதந்திர பலஸ்தீன நாட்டினை ஜோர்தான் ஆற்றுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உருவாக்குவதாகவே இருந்தது. ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் இரு நாட்டு தீர்வு என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டது. , பாலஸ்தீன அரபிக்கள் தமது சொந்த நிலத்தின் மீது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் கோரும் உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டிட அடிக்கடி இஸ்ரேலுடன் இவ்வமைப்பு மோதவேண்டியுள்ளது.

News

Read Previous

முதற் சங்க காலம்

Read Next

கூச்ச சுபாவம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *