உணவு

Vinkmag ad
இந்தியாவில் தயாராகும் உணவில் வீணடிக்கபடும் உணவின் சதவிகிதம் எத்தனை தெரியுமா?
40%..
சுமார் 2.1 கோடி டன் கோதுமை மட்டும் இந்தியாவின் ஒரு ஆண்டுக்கு வீணடிக்கபடுகிறது…ஆக வீணாகும் உணவில் மட்டும் இந்தியாவின் சரிபாதிக்கு உணவளித்துவிடலாம்.
உலக அளவில் 50% உணவுப்பொருட்கள் வீணாகின்றன.
இதில் எத்தனை பெரிய பொருளாதார இழப்பு, சுற்றுசூழல் கேடு என்பதை சொல்லவேண்டியது இல்லை.
உணவகங்களில் வீணாகும் உணவுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்து நேற்று ஒரு சிறுபதிவு எழுதியிருந்தேன்…அதுபோல சந்தைகளில் வீணாகும் காய்கறி,பழங்களையும் காம்போஸ்ட் செய்து பயன்படுத்தலாம்.
வீட்டில் வீணாகும் உணவு
கெட்டுபோன பழம்,காய்கறி
தோட்டத்தில் கிடக்கும் இலை,தழை
பேப்பர்
முட்டை ஓடு
எல்லாவற்றையும் அழகா காம்போஸ்ட் செய்யலாம்.
அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் சின்னதாக பிளாச்டிக் பக்கட் வைத்து காம்போஸ்ட் செய்யலாம். எப்படி என சொல்லிதரும் விடியோக்கள் யுடியூபில் நிறைய உள்ளன.
காம்போஸ்ட் என்பது வீணாகும் உணவை வைத்து உரம் தயாரிப்பது.
வீட்டில் குப்பைகளை இருவிதமாக பிரிக்கவும்.
1) உயிருள்ளவற்றில் இருந்து வரும் குப்பை
2) உயிரில்லாத பிளாஸ்டிக், பாலிதீன் மாதிரி குப்பைகள்
கெட்டுபோய் மீதமாகும் அரிசி, சாம்பார் என இருந்தால் சாக்கடையில் கொட்டுவதுக்கு பதில் வீட்டு இப்படி தனியாக காம்போஸ்ட் குப்பைதொட்டி வைத்து அதில் சேர்த்து நாள்முடிவில்
தோட்டத்தில் ஒரு குழியை தோண்டவும்..புதைக்கவும்…அதன்மேல் சின்னதாக ஒரு குச்சி அல்லது கல்லை வைக்கவும்..நாலைந்து மாதத்தில் மண்ணோடு மண்ணாக மக்கி அழகான உரமாகிவிடும். அதை எடுத்து செடிகளுக்கு போட்டால் அல்லது அதன்மேலேயே செடியை நட்டால் சிறப்பாக வளரும்.
இதன் முக்கிய பலன் சாக்கடை, நதி,நிர்நிலைகளுக்கு செல்லும் கழிவுகளின் எண்ணிக்கை மிக குறைகிறது என்பதும், உர செலவு குறைகிறது என்பதும்தான்.
வீட்டில் தோட்டம் இல்லையெனில் பக்கட்டை வைத்து கூட காம்போஸ்ட் செய்யலாம்..அதற்கான காம்போஸ்ட் பின்கள் புரபஷனலகாம சந்தையில் கிடைக்கும்.
இலை, தழைகளை போடுவது எனில் நன்றாக வெட்டி, துன்டித்து போட்டால் விரைவில் காம்போஸ்ட் ஆகும். முட்டை ஓடுகளை அப்படியே போட்டால் மக்க ஆண்டுக்கணக்காகும். அவற்றை பேப்பரில் சுற்றி நன்றாக உடைத்து மிக்சர் மாதிரி செய்து காம்போஸ்ட் செய்யலாம்.
கோழிகளுக்கு இப்படி கொடுக்கும் தீவனத்தில் முட்டை ஓட்டுபவுடரையும் நன்றாக கலக்கி கொடுக்கலாம். முட்டை ஓடு முழுக்க கால்சியம். செடிகளுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். செடிகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கையில் அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும் கிடைக்கும். கோழிகளுக்கு கால்சியம் மிக முக்கியம். கால்சியம் கூடுதலாக இருந்தால் தான் அவற்றால் முட்டையிடவே முடியும்.
இறைச்சி எலும்புகளை காம்போஸ்ட் செய்யவேண்டாம்…அவற்றை சுட்டு தான் காம்போஸ்ட் பண்ணமுடியும். சற்று நேரம் எடுக்கும் வேலை.
இறைச்சி, ரத்தம் ஆகியவற்றை காம்போஸ்ட் பக்கட்டில் போடவேண்டாம். குழிக்குள் போடுவதானால் போடலாம். போட்டு மண்ணை போட்டு நன்றாக மூடிவிட்டால் வாசம் வராது. மக்கி உரமாகவும் ஆகிவிடும்.
முக்கியமாக உணவுப்பொருட்களை வீணடிக்காமல் இருக்க கற்றுக்கொள்வோம். 40% உணவு வீணாகிறது என்பது எத்தனை பெரிய அவலம்?

News

Read Previous

பொறுப்புணர்வோம் மாந்தர்களே

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *