பொறுப்புணர்வோம் மாந்தர்களே

Vinkmag ad
பொறுப்புணர்வோம்  மாந்தர்களே 
ஊஹானில் தோன்றி , 
உலகெங்கும் பரவி, 
உலுக்கியெடுக்குதிந்த கொரோனா – பல 
உயிர்கள் மடிந்ததய்யா  வீணா . 
கண்ணுக்குத்தெரியாமால் 
கண்ணாமூச்சியாடி 
கண்டபடி பரவியது கொரானா – பலரை  
மண்ணுக்குள் புதைக்குதிந்தக்  கொரோனா .
சீனாவில் தோன்றி, 
சீற்றமுடன் பரவி 
சீரழிக்குது இந்தக் கொரோனா . 
 
கைகழுவ வில்லையென்னில் 
கைநழுவி விடும்  வாழ்க்கை 
முகக்கவசம் இல்லையெனில் 
முடிந்துவிடும் வாழ்க்கை .
தள்ளிநிற்க வில்லையெனில்
தத்தளிக்கும் வாழ்க்கை . 
வீட்டிலிருந்து வெளியே வந்தால் 
விட்டிலாகும் வாழ்க்கை . 
 ஊரடங்கைக் கடைபிடிக்கா 
உன்மத்தர்களின் வாழ்க்கை 
உயிரடங்கி  ஒடுங்கிவிடும் .
உணர்ந்திடுதல் வேண்டும்.  
 
நமக்கு வந்தால் ,இந்த வைரஸ் 
பலருக்கும் பரவும். 
பரவுவதால் இவ்வுலகம் 
பாழாகிப் போகும். 
பாழாகிப்போய் விட்டால் 
இவ்வுலகம் நரகம் .
நரகமாவதைத் தடுக்க 
நம்மால் தான் முடியும். 
 
அரசுகளின்  ஆணைகளைக் 
கடைபிடிக்கவேண்டும். 
காவல் துறை முயற்சிக்கட்குக் 
கரம் கொடுக்கவேண்டும் 
 மருத்துவரும், செவிலியரும் 
நமக்காக உழைக்கும் 
மகத்துவத்தை நாமுணர்ந்து 
மனந்திருந்த வேண்டும். 
துப்புரவுப் பணியாளர்களை 
துதித்திடவும் வேண்டும் .
அருகிலுள்ள வறியவர்க்கு 
அன்னமிடல் வேண்டும் -. அந்த 
உன்னதப்பணி செய்பவர்க்கு 
உதவிடுதல் வேண்டும் .
இயன்றவரை நிதியுதவி 
செய்திடலும்  வேண்டும். 
சுத்தம் , சுகாதாரம் 
பேணிடுதல் வேண்டும்.
சட்டத்திற்குட்பட்டு 
நடந்திடுதல் வேண்டும்.  
எல்லையைக் காக்கின்றார் 
ராணுவத்து வீரர் – நாம் 
இல்லத்திலிருந்து நாட்டைக் 
காத்திடுதல் வேண்டும் .
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .

News

Read Previous

பாசப் போராட்டம்

Read Next

உணவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *