ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
———————————————-
இறைவா நீயே காப்பு……!!!!
———————————————-
நேற்று பிற்பகல் 12-30 மணியளவில்
புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி
கடைகளை பார்வையிட்டேன். மக்கள்
இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச்
சென்றதைக் கண்டேன். நானும் தேங்காய்
வாங்கிக் கொண்டு ஜேப்பில் கை விட்ட
போதுதான் சட்டையை மாற்றிப் போட்ட
நான், பர்சை எடுக்க மறந்தது தெரிந்தது.

எடுத்த தேங்காயை நான் திருப்பி
வைத்தபோது கடைக்காரர், என்ன தம்பி
எடுத்த தேங்காயை திருப்பி வைக்கிறீர்கள்
என்ற போது பர்சை மறந்து விட்ட செய்தி
யை சொல்லி நான் ரூபாய் கொண்டு
வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று
சொன்னனேன், அதற்கு அவர் இல்லை யில்லை நீங்கள் தேங்காயை கொண்டு செல்லுங்கள் நாளைக்கு பணம் கொண்டு வந்து தந்தால் போதும் என்றார்.அவ்வளவு
நம்பிக்கை நம் மக்கள் மீது.

மறுநாள் பணத்தைக் கொடுத்து
விட்டு அண்ணாச்சி எந்த நம்பிக்கையில்
அறிமுகமில்லாத எனக்கு தேங்காய்
தந்தீர்கள் என்று நான் கேட்டபோது அவர்
சொன்ன பதில் என்னை மிகவும் நெகிழச் செய்தது.

என்ன தம்பி காயல் மக்களை
எனக்குத் தெரியாதா..? 55 ஆண்டுகளாக
இந்த ஊரில் வியாபாரம் செய்து வருகி
றேன்.பிறர் பொருளை அனுமதியின்றி உண்ணவோ, எங்களைப் போன்ற
வியாபாரிகளை ஏமாற்றவோ காயல்
மக்களுக்கு தெரியாது என்றார்.மேலும்
அப்படி யாராவது பொருளை வாங்கி
பணம் தராமல் இருந்தால், ஒன்று அதை
மறந்திருப்பார்கள் அல்லது அவர்களின் கஷ்டத்தின் காரணமாக தாமதமாகத்
தருவார்களே தவிர, ஒரு போதும் காயல் மக்கள் ஏமாற்றக் கூடியவர்கள் அல்ல
என்றார் அந்த மாற்று சமய சகோதரர்.

உண்மைதான். நமதூர் மக்களுக்கு
ஹராமான உணவை உண்டு பழக்க
மில்லைதான். காரணம்..? ஹராமான
உணவு உள்ளே சென்று விட்டால் நமது
அத்தனை அமல்களும் சர்வ நாசமாகி
விடும் என்பதில் நாம் முழுக்க முழுக்க
உறுதியானவர்கள்.

இறைவா! உன்னை அஞ்சி வாழக்
கூடிய எங்களை, நீ இறுதி வரையிலும் ஹராமான உணவு உண்ணுவதில்
இருந்து காப்பாயாக. உலகை ஆட்
கொண்டு வரும் கொடிய கொரோனா
வின் பிடியிலிருந்து எங்களையும்,எங்கள் ஊரையும், எங்கள் தாய் திரு நாட்டையும்
காப்பாயாக! பள்ளிக்குச் சென்று தொழ
முடியாத துர்பாக்கிய நிலையிலிருந்து
எங்களை மீட்பாயாக. உனது புனித
ரமளான் நெருங்குகிறது. வழமை போல் நாங்கள் பள்ளிக்கு சென்று அமல் புரிய
நீ அருள் புரிவாயாக.புனித ஹஜ் எந்தவித
இடையூருமின்றி நடந்தேற நீ உதவி
செய்வாயாக! ஆமீன்.

பொய்யான பிரச்சாரங்களால்
முஸ்லிம்களை கருவறுக்கத் துடிப்போரின்
இதயங்களில் உனது அச்சத்தை ஏற்படுத்தி
அவர்களின் தீங்குகளிலிருந்து எங்களை
காப்பாயாக.!!!

ஏ.ஆா்.தாஹா(ART)10-04-2020

News

Read Previous

உணவு

Read Next

அறியாமை அறியப்படும் வரை….

Leave a Reply

Your email address will not be published.