தமிழ்நதி.காம்

Vinkmag ad

www.thamizhnadhi.com
அன்பு நெஞ்சங்களே..

 

இணையதளங்கள்.. வலைப்பதிவுகள்.. என்று தொடங்கி.. கையில் உள்ள அலைபேசி வரை ஆளும்தமிழாய் நம் மொழி வளர்ந்துவிட.. அறிவியல் வளர்ச்சியில் நம்மை இணைத்துக்கொள்ளாமல் எந்த ஒரு தனி மனிதனோ.. அமைப்போ இனி வளர்ச்சி அடையமுடியாது என்கிற நிலையில்.. பல நாட்களாய்.. ஏன்.. பல ஆண்டுகளாய் எண்ணத்தில் மட்டுமிருந்த இந்த முயற்சி இன்று கனிந்து உங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாகவும்.. ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை நான் பெறுவதற்கான களமாகவும் அமையவிருக்கிறது என்கிற அகமகிழ்வை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 

இன்றுமுதல்.. (01.02.2014) thamizhnadhi.comஎன்கிற இணையதளத்தின் வாயிலாக உங்களைச் சந்திக்கவும்.. கருத்துக்களைப் பரிமாறவும் விழைகிறேன்.

 

இதில் இடம்பெறவிருக்கும் பகுதிகளில் சில இனிமேல் இணைக்கப்படவிருக்கின்றன.. இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிடுங்கள்.. தமிழ்ச்சுவை பருகுங்கள்.. கவியரசு கண்ணதாசன் புகழ்பாடி தரணியெங்கும் ஓடுகிற தமிழ் ஆறாக.. காவிரிமைந்தன்..

 

தமிழ்நதி

…நீந்துவோம் வாருங்கள்!!

 

1.      ‘கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்’

கண்ணதாசன் சிலை பிறந்த கதை!

(பம்மல்) தொடக்கம் முதல் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஆண்டுவாரியாக..

வானொலி சிறப்பு நிகழ்ச்சிகள்..

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்..

இணையதளத் தொடர்புகள்..

2.      ‘கண்ணதாசன் கலைக்கூடம்’

தலையாய இலட்சியம்.. உலகத் தமிழ்த்திரையிசை ரசிகர்கள் ஒன்றிணைந்து படைக்கவிருக்கும் எட்டாவது அதிசயம்!

3.      ‘கண்ணதாசன் மின்னஞ்சல்கள்’

வேலூர் – திமிரியிலிருந்து கவிஞர் கண்ணன் சேகர் அவர்களால் தினமும் வழங்கப்படும் கண்ணதாசன் விருந்து!

4.      ‘தமிழ்க் கவிஞர்கள்’

திருவள்ளுவர், கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன்..கவியரசு கண்ணதாசன்.. காவியக் கவிஞர் வாலி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் கவிஞர் மருதகாசி, புலவர் புலமைப்பித்தன்,  கவிஞர் முத்துலிங்கம்..

5.      ‘காவிரிமைந்தன் படைப்புகள்’

கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள்

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றவை

காற்றலைகளில் கண்ணதாசனின் பாட்டுத்தேரோட்டம்

வாழும் தமிழே வாலி

நேரம் நம்ம நேரம் தொடரட்டும்

பொற்காலப்பாடல்களின் பூக்கோலங்கள்

காவிரிமைந்தன் கவிதைகள்

காவிரிமைந்தன் மடல்கள்

காதல் பொதுமறை

 

என்றும்  அன்புடன் உங்கள்…

 

காவிரிமைந்தன் 

 

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 

பம்மல் –  சென்னை 600 075

தற்போது –  அபுதாபி – அமீரகம் 

00971 50 2519693

Email:     thamizhnadhi2014@gmail.com

Website: www.thamizhnadhi.com

News

Read Previous

தென்றல் சிறுகதைப் போட்டி

Read Next

அம்மா திட்டம் முகாம் துவக்கம்

Leave a Reply

Your email address will not be published.