முதுகுளத்தூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
முதுகுளத்தூரில் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக ஒன்றியக் கழகத்தின் சார்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு.ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 61வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம்,
அரசு மருத்துவமனை, பசும்குடிலில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு திமுகவினர் இனிப்பு வழங்கினர்.
இந் நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர் பூபதிமணி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தூவல் முனியசாமி, காமராஜர், முகம்மது அபுபக்கர், அண்ணாத்துரை, பேரூராட்சித் துணைத் தலைவர் ஏ.பாசில் அமீன், நகர இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்