முதுகுளத்தூரில் மருத்துவ முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். முகாமில் இருதயம் புற்றுநோய், சக்கரைநோய் மற்றும் கண்நோய் போன்றவைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் கே.கர்ணன், ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர், வீட்டு வசதி சங்க தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி, கவுன்சிலர்கள் சரஸ்வதி செந்தில்குமார், முருகன், ஒன்றிய மீனவரணி செயலாளர் முருகேசன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

முதுகுளத்தூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Read Next

பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு!

Leave a Reply

Your email address will not be published.