தேங்காய்

Vinkmag ad

இயற்கை மருத்துவம் அறிந்து தெளிவோம்

 
பச்சை தேங்காய் உண்பதால்  உணடாகும்
அற்புதங்களை அனுபவிப்போம்.

தேங்காயின் தாவரவியல் பெயர் காக்கஸ் நியூசிபேரா ஆகும்.

கற்பக தரு என்று அழைக்கப்படும்

தேங்காயின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயனுள்ளதாக உள்ளன.

தேங்காய் தென்னை மரத்தின் கனியாக கருதப்படுகிறது.

தென்னை மரம் உப்பு நீரிலும் வளரும் இயல்புடையது.

பிலிப்பைன்ஸ் நாடு தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

நூறு கிராம் தேங்காயில்

அடங்கியுள்ள சத்துக்கள்

கார்போஹைட்ரேட் – 15 கிராம்,

புரதம் – 3.3 கிராம்,

சோடியம் – 20 மில்லிகிராம்,

கால்சியம் – 14 மில்லிகிராம்,

மெக்னீசியம் – 32 மில்லிகிராம்,

இரும்பு – 2 மில்லிகிராம்,

மாங்கனீஸ் – 1.5 மில்லிகிராம்,

பாஸ்பரஸ் – 113 மில்லிகிராம்,

பொட்டாசியம் – 356 மில்லிகிராம்,

வைட்டமின் C – 3.3 மில்லிகிராம்

ஆகியன ஆகும்.

பயன்கள்:

தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் பால் காரத்தன்மை உள்ளதால்

அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று புண்களுக்கு மிகவும் சிறந்தது

. மேலும் தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட்

மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை

வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உடையது.

முத்திய தேங்காயில் உள்ள வைட்டமின் சி

முதுமையை தடுத்திடும்.

மேலும்

தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காயில் உள்ள மெக்னீசிய சத்தானது

நரம்பு செல்லுக்கு வலுவூட்டியாகவும்,

மாங்கனீஸ் சத்து சர்க்கரை நோய் தடுப்பானாகவும்,

பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவி புரிகின்றது.

தேங்காயில் உள்ள நார்ச்சத்தானது

இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்தியும்,

உணவானது குளுக்கோஸாக மாறும் நிலையை தாமதப்படுத்துவதன் மூலம்

சர்க்கரை நோயிலிருந்து காக்கிறது.

தேங்காயில் கொழுப்புகள் இருந்தாலும்

உடலில் குறைந்த அடர்த்தி கொழுப்பின் (LDL) அளவை கட்டுப்படுத்துவதில் பெரிதும் துணைபுரிகிறது.

தேங்காயில் உள்ள பாஸ்பரஸ் கால்சியம் சத்தானது

எலும்புகளின் உறுதிக்கு உறுதுணையாக இருக்கிறது.

தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால்

கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து

குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்.

அவ்வளவு ஆரோக்கியம்!

பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு

தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.

ஆனால் இப்போது, மாட்டு பால் ஊற்றி துக்கத்தில் ஆழ்கிறார்கள்

காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து

அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து,

(பாக்கட் பாலை தவிர்த்து விட்டு),

அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை.!

தொடர்வோம் இயற்கை மருத்துவம்.

நன்றி எம் உறவுகளே.

என்றும் உங்கள் நலநெறியாளன்..    

ஜே. அன்புரோஸ்
9360456063

News

Read Previous

தியாகம் என்பதே குர்பான்

Read Next

பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களுக்கு பாராட்டு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *