கூட்டணிக்குறும்பாக்கள்
கூட்டணிக்குறும்பாக்கள்
==========================================ருத்ரா
கலைஞர்
==========
சக்கர நாற்காலி தான்.
இருப்பினும்
தமிழினக் காவலின்
சக்கரவர்த்தி இவர்.
தளபதி
=======
தமிழ் நாட்டின் மைல்கற்களுக்கு
எல்லாம் புன் முறுவல் தான்.
புல்லும் பூச்சிகளும் கூட
மனுக்கள் நீட்டின.
அம்மா
=======
நூத்துப்பத்து விதியின்
தொட்டிலில் போட்டு
ஆட்டி ஆட்டியே
குழந்தைகள் எல்லாம்
கப் சிப்..
வைகோ
========
உதிரிகளை வைத்துக்கொண்டு
ஊசிப்பட்டாசு வெடித்து
விடியல் காண புறப்பட்டு விட்டார்.
பாமக
======
அன்பு மகன் இருக்கையில்
முதல்வர் இருக்கை
வேறு யாருக்கு இங்கு குத்தகை?
விஜயகாந்த்
============
இன்று எதைப் பேசுவது?
பொறுங்கள்!
பெட்டிக்குள் கிளி சென்றிருக்கிறது
சீட்டு எடுத்து கொடுக்க.
பாஜக
======
ஐநாவை
ராஜபக்ஷேயின் கழுத்தில்
பொன்னாடையாய் போர்த்திவிட்டு
தமிழர்களுக்கு அநியாயத்தீர்ப்பு
வழங்குவது மட்டுமே
இவர்களது அடையாளம்
வலது இடது நண்பர்கள்
========================
பாட்டாளி வர்க்கம் மேம்படவே
வில் அம்பு தூக்கியிருக்கிறார்கள்!
தேர்தல் காலத்துக்கு மட்டுமே
தாற்காலிகமாய் இந்த காகித அம்புகள்!
===================================================