எனக்கு எல்லாமும் நீ
எனக்கு எல்லாமும் நீ
—————————
உதிக்கும் கதிரின் ஒளிவெள்ளம் நீ
உயர்வானில் தவழும் தண்மதியும் நீ
ஒளிரும் விண்மீனின் கண்சிமிட்டல் நீ
விடியலில் தெரியும் வெள்ளிக் கீற்று நீ
வான்மழை தரும் கார்மேகம் நீ
வறண்ட பூமியில் பசுமையும் நீ
அள்ளக் குறையா அட்சயபாத்திரம் நீ
அருந்தவம் ஈந்த அமுதசுரபி நீ
அலைகள் தேடும் கரையாய் நீ
அள்ளிப் பருகும் நதியாய் நீ
வித்துக்குள் உறங்கும் விருட்சம் நீ
வியத்தகு பண்புகளின் உச்சம் நீ
கரிக்குள் புதைந்த வைரம் நீ
சிப்பியுள் விளைந்த முத்தும் நீ
மொட்டவிழும் மலரின் சுகந்தம் நீ
முகிழ்த்த கனியின் இனிமையும் நீ
இலை நுனியின் பனித்துளி நீ
இதயம் வருடும் தென்றல் நீ
மழைத்துளி பிரதிபலித்த வானவில் நீ
மான் விழியின் மருட்சியும் நீ
மார்பில் துயிலும் மலர்வனமும் நீ
புல்லாங்குழலின் பூபாளம் நீ
புல்புல் தாராவின் இசையும் நீ
விரல்கள் மீட்டும் யாழ் நீ
வீணை நரம்பின் நாதமும் நீ
என்னில் கலந்த உயிரும் நீ
எனக்கு கிடைத்த வரமும் நீ
என்னை அரவணைத்த அன்பும் நீ
என்னை ஆட்கொண்ட எல்லாமும் நீ
மு முகமது யூசுப் உடன்குடி