1. Home
  2. பிரச்சனை

Tag: பிரச்சனை

ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

ஆயிரம் பிரச்சனை எஸ் வி வேணுகோபாலன்  மிகப் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துவிட வேண்டும் என்று திடீர் என்று ஏனோ தோன்றிவிட்டது குமாருக்கு. அதற்குக் காரணம் அந்த மருத்துவர் தான். பல நாட்கள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்டவனுக்கு அவர் கொடுத்த மருத்து தான் காரணம். கவனப் பிசகால், மருந்து எழுதிய சீட்டை மேசை…

கல்வி என்பது தேசத்தின் பிரச்சனை

கல்வி என்பது தேசத்தின் பிரச்சனை பேரா.கே.ராஜூ ஆசிரியர், புதிய ஆசிரியன் நாடு தழுவிய கல்விப் பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பாக வரும் 2019 பிப்ரவரி 19 அன்று தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி “கல்விக்கானமக்கள் பேரணி” நடைபெற உள்ளது.கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அருகமைப் பள்ளிகள் அவசியம் தேவை, அரசுப்பள்ளிகளை படிப்படியாக மூடுவது என்ற கொள்கையைக் கைவிட்டு அவற்றைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும், தேசிய மருத்துவ மசோதா 2017-ஐ திரும்பப் பெற வேண்டும், கல்வியைக் காவிமயமாக்காமல் மதச்சார்பின்மைக் கல்வியை அளிக்கவேண்டும், அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணிநடைபெற உள்ளது. இத்தருணத்தில் இப்பேரணி பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்து, இன்றையக் கல்வி எதிர்நோக்கும்சவால்கள் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் – குறிப்பாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் – ஏற்படுத்த நூலாசிரியர்ஜி.ராமகிருஷ்ணன் இச்சிறு பிரசுரத்தைத் தயாரித்துள்ளார். முத்தாய்ப்பாக “கல்வி என்பது மாணவர்-ஆசிரியர் பிரச்சனை அல்ல அதுதேசத்தின் பிரச்சனை” எனக்கூறி முடிக்கிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சின்னக்கண்ணன் பல்வேறு தடைகளைத் தாண்டி தேசியக் குழந்தைகள்அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து விருது பெற்ற நிகழ்வுடன் தொடங்குகிறது பிரசுரம். அப்படியே பழங்குடி, தலித்மாணவர்கள் தொடக்கக்கல்வியைப் பெறவே அன்றாடம் பெறும் இன்னல்கள், குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைத்தொழிலாளர்களாகப் பணி புரியும் சிறார்களை பள்ளிகளுக்குக் கொணர்ந்து படிக்க வைக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, அரசுப் பள்ளிகளையும் ஆதிதிராவிடநலப் பள்ளிகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்காததால் அப்பள்ளிகள் மூடப்படுவது, அதன் காரணமாக அப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது, அதையே காரணமாகக் காட்டி மேலும் பல பள்ளிகளை மூட மத்தியஅரசின் நிதி ஆயோக் பரிந்துரைப்பது, அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக தனியார் பள்ளிகளை ஊக்குவித்து தனியார் நிர்வாகங்கள் ஆசிரியர்,மாணவர்களைச் சுரண்டுவதற்கு அரசே துணை நிற்பது, தமிழகத்தில் நடப்பதற்கு மாறாக, கேரளத்தில் இடது முன்னணி அரசு எடுக்கும்முயற்சிகளின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கல்விப் பிரச்சனைகளில் மத்திய அரசும் மாநிலஅரசும் கலந்து பேசி முடிவெடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது, நவீன தாராளமயக் கொள்கையின்விளைவாக அனைவருக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய மாநில அரசுகள் கழன்று கொள்வது எனப் பல்வேறு தளங்களில்பயணிக்கும் ஆசிரியர் அவற்றுக்கான ஆதாரமாக தக்க புள்ளிவிவரங்களையும் தருகிறார். இந்த விவரங்கள் மக்களைச் சென்றடைய ஆசிரிய இயக்கங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை.சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கல்வியே அடிப்படை என்பதால் ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி வழங்கிடும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்பது விடுதலைப் போராட்டக்கனவாக இருந்ததைப் பொருத்தமாக நினைவூட்டுகிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். பள்ளிக் கல்வி முடித்த மாணவர்களில் 75 சதவீதம் பேர்உயர்கல்வி பெற முடியாத அவல நிலையில் இன்று இருப்பது, கல்வித்துறையில் கொடி கட்டிப் பறக்கும் ‘கல்வித் தந்தை’களின் அதிகாரம்,பாஜக அரசு வந்தபிறகு தனியார்மயம் மேலும் தீவிரமாகியிருப்பது, கல்வி வளாக ஜனநாயகத்திற்கு பாஜக அரசு ஏற்படுத்தி வரும் ஆபத்து, அதற்குச் சான்றாக நிற்கும் ரோகித் வெமுலா முதல் கன்னையா குமார் வரை உள்ள பல்வேறு நிகழ்வுகள், தேசத் துரோகச் சட்டத்தைப்பயன்படுத்தி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பூட்டு போடும் மத்திய அரசு, கல்வியைக் காவிமயமாக்குவதோடு தேசியஅறிவியல் மாநாடுகளில் போலி அறிவியலை முன்மொழிய பிரதமரே முன்நிற்பது போன்ற அபாயங்களைச் சுட்டிக் காட்டவும் நூலாசிரியர்தவறவில்லை. இன்றைய ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படித்து உள்வாங்க வேண்டிய பொக்கிஷமாக இப்பிரசுரத்தைத் தயாரித்துள்ளஆசிரியரையும் பதிப்பித்த பாரதி புத்தகாலயத்தையும் உளமாறப் பாராட்டுவோம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில்இதுபோன்ற முயற்சிகள் மேலும் பரவலாக நடைபெற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தால் தேசம் தப்பிக்கும். கல்வியைக் காக்கும் தேச பக்திப்போராட்டம் ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன் வெளியீடு : புதிய ஆசிரியன் இணைந்து பாரதி புத்தகாலயம் 7 இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 600 018

சிக்கலான பிரச்சனைகளை அறிவியலால் தீர்க்க முடியும்

சிக்கலான பிரச்சனைகளை அறிவியலால் தீர்க்க முடியும் பேராசிரியர் கே. ராஜு பெயர் பெற்ற கல்வியாளரும் அறிவியல் நிறுவன நிர்வாகியுமான பேரா. விஜய் ராகவன் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளராகத் தடம் பதித்தவர். அண்மையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். நாடெங்கிலும் அறிவியல் பணிகளைத் திட்டமிட்டு…

சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்…!*

சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்…!* உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல்நோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன்…

உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள்!!!

உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள்!!! தொப்பை :- வெள்ளை வெங்காயத்தை நெய் சேர்த்து வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும், மாலையிலும் 1 டீஸ்பூன் உட்கொண்டு வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைய ஆரம்பிக்கும். வயிற்றுப்புழு :- துவரம் பருப்பு வேக வைத்த…

அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்

எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம் பலமணி நேரம் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில்…

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை   பிற மனிதர்களை பார்க்கும் போது புன்முறுவல் பூப்பதும் தர்மம் – நபிகள் நாயகம் (ஸல்) புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் ‘புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?’ என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக்…