துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது

Vinkmag ad
mauto2துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது
துபாய் : துபாயில் இந்திய – அமீரகம் திட்டக் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சென்னையை
தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி இந்தியா
நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை அமீரக பொருளாதாரத்துறையின் அதிகாரி ஜுமா முகம்மது அல் கைத் வழங்க
 எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மன்சூர் அலி கான் அவர்களிடம்
வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது : எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி இந்தியா நிறுவனம்
இந்தியாவில் முதன் முதலாக தமிழகத்தில் மின்சார பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை அறிமுகம்
படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பானது பெருமளவு குறையும்.
இந்த திட்டத்தில் பொதுமக்களும் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசும், தமிழக அரசும்
இந்த திட்டப்பணிகளுக்கு சிறப்பாக உதவி வருகிறது.
அமீரகத்திலும் முக்கிய சுற்றுலா தளங்களில் மின்சாரத்தால் இயக்கப்படும்  ஆட்டோக்களை இயக்க
தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அமீரகத்தில்
உள்ள அரசுத்துறைகளுடன் பேசப்பட்டு வருகிறது. இதற்கு அமீரக அரசுத்துறைகளும் மிகவும்
ஆர்வத்தை காட்டி வருகிறது என்றார்.
இந்திய உணவு பதப்படுத்துதல் துறை துணை மந்திரி ராமேஷ்வர் தெலி, பிரபல கிரிக்கெட் வீரர்
ஹர்பஜன் சிங்,  எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாஸ்மின் ஜவகர் அலி   உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு அமீரகத்தின் வர்த்தக தலைநகராக விளங்கி வரும்
துபாய் நகரில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

வெண்கொற்றக்குடை

Read Next

தமிழ் வாழ்க‌

Leave a Reply

Your email address will not be published.