1. Home
  2. இலக்கியம்

Category: சிந்தனைக் கருத்துக்கள்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே! உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே! உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே! 15 வாழ்க்கைத் தத்துவங்கள் 1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி. சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி. 2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது. நம்…

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

முற்றிலும் உண்மை….. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்துபார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ளசாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில்மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போதுரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன்வீடு செல்ல முடிவெடுத்தார். .. அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒருடிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது… கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்… நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவைதட்டியது… கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்… நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்…. கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அதுஎவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்லடிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்துகதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பேஇல்லன்னு…. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படிதான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரேகிடைக்காது.. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬•

நீ …………..

நீ த‌னிமையில் இருக்கும் நேர‌ம் – ‍ நான்  த‌னியே ஆகிவிட்டேன் என‌ச் சொல்லாதே ! ஒருவ‌ன் என்னைக் க‌ண்காணிக்கிறான் என‌ச் சொல் ! இறைவ‌ன் விநாடிப் பொழுதேனும் க‌வ‌ன‌மின்றி   இருப்பான் என்று க‌ருதிவிடாதே ! அவ‌ன‌றியாத‌ ர‌க‌சிய‌மும் உண்டென‌   எண்ணிவிடாதே ! —-‍ அர‌புக் க‌விஞ‌ர் அபுல்…

சிந்தனைத் துளிகள்….!!!!!!!!

காய் , காய் , காய் , காய் , மாச்சீர் , தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்   தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய் களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்    வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்  –  குளிப்பாட்டும் …

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

தமிழ்நாட்டுப் பழமொழிகள்  அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது. அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். அசையாத மணி அடிக்காது அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும். அழகும், மணமுள்ள பூக்களும்…