1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன்,…

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார்  நிச்ச யமிது…

ஏங்கும் நெஞ்சம்

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே! [மீண்டும் மீண்டும்] ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும் அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்! ஆதி அந்தம் அனைத்தும்…

”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது-…

ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் !

                   அதிரை அருட்கவி அல்ஹாஜ்                மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.                                               ஆதி இறைவன் இல்லம் ஒன்றே                                                  அழகாய் ஹஜ்ஜு செய்திடவே                                                வேதம் தன்னில் “கடமை” என்றே                                                               விளக்கம், சொன்னான் இறையோனே !                                        ஓதும் வேதம் வழியில் சென்றால்                                  …

ரமலான் நோன்பின் மாண்பு !

நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான் ! உணவை மட்டும் துறப்பதா நோன்பு ? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம் !…

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை…

புனித ரமலான் வருக! வருகவே!!

அருமறையின் அடிச்சுவட்டில் அகமெங்கும் அர்ப்பணித்து ஆண்டவனின் தாள்பணிந்து அகிலத்தோர் வாழ்தலெனும் பெருமைமிகு நபிகளவர் செப்பிய வழிநடக்கும் முகமதியர் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் விரதமன்றோ? தருவதிலே உள்ள இன்பம் தரணியெங்கும் தான் பரவ ஈதல்செய்து உவக்கும் இஸ்லாமிய மார்க்கமதில் நோன்பதன் மாண்பதனை முப்பது நாட்கள் கண்டு ஊன் உயிர் யாவையும் ஒன்றெனப்…

அமலால் நிறையும் ரமலான்

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்          படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்           கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை…

தொழு…!

தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம் உனக்களித்த ஏகனைத் தொழு! காணவும் களிக்கவும் கண்களால் ரசிக்கவும் பார்வையைத் தந்தவனை நேர்மையாய்த் தொழு! கேட்கவும் கிறங்கவும் கேட்டதை உணரவும்…